உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

103

குமரிக் கண்டத் தமிழக்கலவரும் கடலோடிகளும் உலக முழுதும் கலத்திற் சுற்றினமை வடவை (Aurora Borealis) என்னும் சொல்லாலும், தமிழர் கடல் வணிகத் தொன்மை,

"முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை”

என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும் (980), அரபி நாட்டுக் குதிரையும் ஒட்டகமும் தொல்காப்பியத்திற் குறிக்கப்படுவதாலும், உணரப் படும்.

பேரா. நீலகண்ட சாத்திரியாரும் தாம் எழுதிய திருவிசய (Sri Vijay) நாட்டு வரலாற்றுத் தோற்றுவாயில், "The more we learn the further goes

back the history of eastern navigation' and so far as we know, the Indian Ocean was the first centre of the oceanic activity of man" என்று, தமிழர் முதன் முதல் இந்துமா வாரியிற் கலஞ் செலுத்தியதையும் அவர் கடல் வாணிகத் தொன்மையையும் கூறாமற் கூறியிருத்தல் காண்க.

$6

யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்"

என்பது (அகம். 149: 9 - 10), கிரேக்கரும் உரோமரும் பொன் கொண்டு வந்து மிளகு வாங்கிச் சென்றதையும்.

65

விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்

நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்

புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ டனைத்தும்”

என்பது (மதுரை. 321 - 23). அரபியரும் பிறரும் குதிரை கொண்டு வந்து அணிகலம் வாங்கிச் சென்றதையும் கூறும்.

12.அரசியல்

முதற் காலத்தில், முழுகிப் போன குமரிக் கண்டம் முழுவதும் பாண்டி நாடாகவும், குமரிமுனை முதல் பனிமலை வரையும் குடபாதி சேர நாடாகவும் குணபாதி சோழ நாடாகவும், இருந்தன.

பழம் பாண்டிநாடு, தென்பாலி நாடு முதல் குமரியாறு வரை எழுநூறு காதம் (2001 கல்) நீண்டிருந்தது. பாண்டியன் அதையிழந்தபின், பிற்காலத்துப் பாண்டி நாடாகிய நெல்லை மதுரை முகவை மாவட்டப் பகுதியை, சோழ நாட்டினின்றும் கைப்பற்றி யாண்டான். இதன் உண்மையை,

66

மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்

மெலிவின்று மேற்சென்று மேவார்நா டிடம்படப்