உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

என்னும் முல்லைக்கலித் தரவாலும் (4),

"6

65

'அங்ஙனமாகிய நிலக் குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமுமென்னு மிவற்றை, இழந்த நாட்டிற்காகவாண்ட தென்னவன்” என்னும் அடியார்க்கு நல்லார் உரையாலும் (சிலப். பக். 303), அறிக.

குமரிக்கண்டம் முழுகி, வடநாட்டுக் கொடுந்தமிழ் திரவிடமாகத் திரிந்து வடநாடு மொழிபெயர் தேயமான பின் தமிழகம் மிகச் சுருங்கி விட்டது. முதற்காலத்தில் பாண்டி நாடு ஐம்மண்டலங்களாகவும், சோழ நாடு புனல் மண்டலம் (புன்னாடு) தொண்டை மண்டலம் என இரு மண்டலங் களாகவும், சேரநாட மலை மண்டலம் கொங்கு மண்டலம் என இரு மண்டலங்களாகவும், பிரிக்கப்பட்டிருந்ததாகக் தெரிகின்றது.

பாண்டியன் ஐந்துணையரசரைக் கொண்டு ஆண்டதால், பஞ்சவன்

எனப்பட்டான்.

"பழியொடு படராப் பஞ்சவ வாழி" (சிலப். 20:33). அஞ்சவன் என்ற சொல்லே பஞ்சவன் என்று திரிந்திருத்தல் வேண்டும்.

ஒ. நோ: அப்பளம் - அப்பளமு. அப்படமு (தெ.); அப்பள, பப்பள (க.); பப்படம்(ம.); பர்ப்பட்ட (வ.); அப்பா-Epapa.

அப்பளித் துருட்டுபவது அப்பளம். அப்பளித்தல்

தேய்த்தல்.

-

சமனாகத்

பாண்டியனைக் குறிக்கும் பஞ்சவன் என்னும் பெயர் ஒருமை யென்றும், பாண்டவரைக் குறிக்கும் பஞ்சவர் என்னும் பெயர் பன்மை யென்றும், வேறபாடறிதல் வேண்டும்.

தொண்டை மண்டலம் சோழர் ஆட்சியினின்று நீங்கினது போன்றே, கொங்கு மண்டலமும் சேரர் ஆட்சியினின்று பிற்காலத்தில் நீங்கி விட்டது. கொங்கு மண்டலம் முதலிற் சேரநாட்டின் பகுதியாயிருந்தமை, கொல்லிச் சிலம்பன் என்னும் சேரன் பெயராலும், சேரர் குடியினனான அதிகமான் தகடூரை ஆண்டதினாலும், "சேரர் கொங்குவை காவூர்நன்னாடதில்” என்று அருணகிரிநாதர் பாடியிருப்பதாலும், வஞ்சிக்குக் கருவூர் என்னும் பெயருண்மை யாலும், பிறவற்றாலும், அறியப்படும்.

ஒவ்வொரு நாடும் பல கோட்டம் அல்லது வளநாடு என்னும் பெரும் பிரிவுகளாகவும், ஒவ்வொரு பெரும் பிரிவும் பல கூற்றம் அல்லது நாடு