உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

105

என்னும் சிறு பிரிவுகளாகவும், பிரிக்கப்பட்டிருந்தன. முத்தமிழ் நாடும் ஒரே வேந்தனது ஆட்சிக்குட்பட்ட பிற்காலத்தில், ஒவ்வொரு தமிழ் நாடும் ஒரு பெரு மண்டலமாகக் கருதப்பட்டது. இந் நிலைமை முற்காலத்தில் இல்லை. ஆட்சிபற்றி முந்நாடும் வேறுபட்டவேனும், மொழி பற்றித் தமிழகம் என ஒன்றுபட்டே யிருந்து வந்தன. ஒவ்வொரு கூற்றமும் அதையொத்த நாடும் பல தனியூர்களாகவும் பல சிற்றூர்கள் சேர்ந்த பற்றுக்களாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. தனியூர் ஊராட்சியும் பற்று ஊராட்சி யொன்றியமும் ஒத்தன.

ஒவ்வொரு தனியூரிலும் அல்லது பற்றிலும், ஊரவை என்ற அடிப்படையாட்சிக் குழு இருந்தது. அது ஆண்டுதோறும் திருவுளச் சீட்டுப் போன்ற குடவோலையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. குற்றவாளிகளும் பொறுப்பற்றவர்களும் அதில் இடம் பெறவில்லை. ஊராட்சியின் ஒவ்வொரு துறையையும் கவனிக்க, வாரியம் என்னும் உட்குழு அமைக்கப்பட்டது. அவ்வாரியங்கள் ஏரி வாரியம், கலிங்கு வாரியம், கழனி வாரியம், தோட்ட வாரியம், குடும்பு வாரியம், பொன் வாரியம், கணக்க வாரியம், கோயில் வாரியம், தடிவழி (பெருஞ்சாலை) வாரியம், பஞ்சவார வாரியம், ஆட்டை வாரியம் முதலியனவாகும். ஊரவை நடபடிக்கைகளையும் கணக்கையும் எழுதி வைக்க ஊர்க்கணக்கன் என்னும் அலுவலன் இருந்தான்.

பஞ்சவார வாரியம் வரித்தண்டலைக் கவனிப்பதென்றும், பிற வாரியங்களை மேற்பார்ப்பதென்றும், பலவாறாகக் கூறுவர். அது இயற்கையாகவோ செயற்கையாகவோ உண்டாகும் உணவுப் பஞ்சத்தைத் தடுக்க ஏற்பட்டதாகவும் இருக்கலாம். வழக்குத்தீர்த்து முறை செய்தல் ஆட்டை வாரியத்தின் கடமையாகும். உரிமை(civil) வழக்கு, குற்ற (Crimi- nal) வழக்கு ஆகிய இரண்டையும் கேட்டு, கொலைத் தண்டம் செய்யவும் அவ்வாரியத்திற்கு அதிகாரமிருந்தது. மன்றுபாடு, தண்டா, குற்றம் எனத் தண்டனை மூவகைப்பட்டிருந்தது.

=

அமை-அவை. ஒ.நோ: அம்மை-அவ்வை, குமி - குவி. அமைதல் நெருங்குதல், பொருந்துதல், கூடுதல். அமை = கூட்டம் (முதனிலைத் தொழிலாகு பெயர்.) ஒ.நோ; இமை - குமை.(வ.).

ஒவ்வொரு கூற்றத்தையும் கவனிக்க நாடாள்வான் என்ற அதிகாரி யும், ஒவ்வொரு கோட்டத்தையும் மேற்பார்க்க நாடு கண்காட்சி என்ற அதிகாரியும் இருந்தனர்.

66

'ஊரமை செய்யும் வாரியப் பெருமக்களோம்"

(S.I.I.i, 117).

அவை - சவை - சபா(வ.). ஒ.நோ: வடவை - வடவா(வ.) -படபா(வ.).

அரசன் தலைநகரிலிருந்து ஆண்டு வந்தான். அரசனுக்குக் காவல் தொழிலே சிறப்பாதலாலும், காவலம், புரவலன் என்னும் பெயருண்மை