உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

யாலும், அரசு என்பது அரண் என்னும் சொல்லிற்கு இனமாய்,பாதுகாப்பு அல்லது காவல் என்னும் கருத்தை அடிப் படையாய்க் கொண்டதாகக் தெரிகின்றது. அரசு-அரசன்.

Gk.archon, L.rex, regis, Skt.rajan

அரசன் - அரைசன் - அரையன் - ராயன் (கொச்சை)- ராயலு(தெ.)

E.roy, king, as in Viceroy.

ME.royal (adj.) f.OF. roial.

அரசர் குறுநில மன்னரும் பெருநில மன்னரும் என இரு திறத்தார். சிலவூர்த் தலைவரான கிழவரும் பலவூர்த் தலைவரான வேளிரும் பொரு நரும் குறுநில மன்னர் பெருநாட்டுத் தலைவரான சேர சோழ பாண்டியர் மூவரும் பெருநில மன்னர். அவர் முடி சூடியதால் வேந்தர் எனப்பட்டார். குறுநில மன்னர் அவருக்கடங்கிய சிற்றரசர்.

வேய்ந்தோன்-வேந்தன். வேய்தல்-முடியணிதல். கொன்றை வேய்ந் னான சிவனைக் கொன்றை வேந்தன் என்று ஔவையார் கூறுதல் காண்க.

தோன

மூவேந்தரும் அவர் குடும்பத்தினரும் பொதுவாகக் கோக்கள் எனப்படுவர். குடவர்கோ, கோப்பெருஞ்சோழன், கோயில், கோப்பெருந் தேவி, இளங்கோவடிகள் என்னும் பெயர்களை நோக்குக.

கோவன் - கோன் - இடையன். இடையன் ஆடுகளைக் காப்பது போல் மக்களைக் காக்கும் அரசன்.

கோன் - (Turk.khan) (கான்) என்பர் கால்டுவெல். கோன் - கொ.

மூவேந்தரும், ஐம்பெருங்குழு, எண்பேராயம், உறுதிச் சுற்றம் என மூவகைப்பட்ட பதினெண்கணத் துணைவருடன், ஆட்சி செய்து வந்தனர்.

அமைச்சர், போற்றியர், படைத்தலைவர், தூதர் ஒற்றர்என்பவர் ஐம்பெருங் குழுவார். அமைச்சர் அரசியல் வினைகளை அமைப்பவர் அல்லது அரசனுக்கு நெருங்கியிருப்பவர். அமைதல்-நெருங்குதல். போற்றியர் தமிழப் பூசாரியர். பிராமணர் வந்தபின், போற்றியர் இடத்தில் புரோகிதர் அமர்த்தப்பட்டார். தூதன் என்பது முன் செல்பவன் என்று பொருள்படும் தென் சொல். தூது - தூதன். இவ்விரு சொல்லும் வடமொழியில் தூத (duta) என்று திரியும்.

கணக்கர், கருமத் தலைவர், பொன் சுற்றத்தார் அல்லது பொக்கச சாலையர், வாயிற் காவலர், நகர மாந்தர், படைத்தலைவர், குதிரை மறவர்,