உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

அல்லோலக்கம் என்றும் பெயர் பெறும். கொடை வேளை கொடை முரசும் முறை வேளை முறை முரசும் அறைந்து தெரிவிக்கப் பெறும்.

வேந்தன் அரசியற் பணியில் ஈடுபட்டிருக்கும் போதெல்லாம், சில அதிகாரிகள் அவனுடனிருப்பர். அவர் உடன் கூட்டத்தார் எனப்படுவர்.

வேந்தன் அவ்வப்போது இடும் கட்டளைகளைத் திருவாய்க் கேள்வி என்பவர் கேட்டு வந்து, எழுத்தாளரிடம் அறிவிப்பார். வேந்தன் கட்டளைகளை எழுதுபவர் திருமந்திரவோலை என்பார். அவருக்குத் தலைவராயிருப்பவர் திருமந்திரவோலை நாயகம் எனப்படுவர். நாள்தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக் குறிப்பில் எழுதி வைப்பவர் பட்டோலைப் பெருமான். ஊரவை களினின்றும் பிற அதிகாரிகளிடத்திருந்தும் வரும் ஒலைகளைப் படித்துப் பார்த்து, அவற்றிற்குத் தக்க விடையனுப்புவோர் விடையிலார் என்போர். வேந்தன் கட்டளைகள் செய்யப்படும் பொத்தகம் கேள்வி வரி எனப்படும்.

நாட்டுத் தலைநகரிலும் கோட்டத் தலைநகரிலும், நிலப் பதிவு செய்யும் ஆவணக் களரியும் அறங்கூற வையம் என்னும் வழக்குத் தீர்ப்பு மன்றமும், இருந்ததாகக் தெரிகின்றது. அரசர் வழக்குக்குளையும் அறங்கூறவை யத்தாரின் தவறான தீர்ப்புக்களையும், வேந்தனே கவனித்து வந்தான்.

வரிப் பணமும் புதையலும் சிற்றரசரிடும் திறையும் தோற்றுப்போன பகையரசர் கொடுக்கும் தண்டமும், வேந்தன் வருவாய்களாகும்.

பணம், அச்சிட்ட காசாகவும் நிறைப் பொன்னாகவும் இருவகையில் வழங்கிற்று. அக்கம், காசு, காணம், பொன், மாடை முதலியன காசு வகைகள். பொற்காசுகளையும் பொற் கட்டிகளையும் நோட்டஞ் செய்யும் அதிகாரிகள் வண்ணக்கர் என்னப்பட்டார். காசு - E.Cash.

கோநகர்க்காவலும் பாடிகாவல் என்னும் ஊர்க்காவலும் போக்குவரத்துச்

சாலைக்காவலும், இரவும் பகலும் ஒழுங்காய் நடைபெற்றன.

66

நிலன் அகழ் உளியர் கலன் அசைஇக் கொட்கும்

கண்மா றாடவர் ஒடுக்கம் ஒற்றி

வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத் துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர் அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த நூல்வழிப் பிழையா நுணுங்குநுண் தேர்ச்சி ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர் தேர்வழங்கு தெருவில் நீர்திரண் டொழுக மழையமைந் துற்ற அரைநாள் அமயமும் அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின்