உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

கடவுள் வழங்கும் கையறு கங்குலும் அச்சம் அறியா தேமமாகிய

மற்றை யாமம் பகலுறக் கழிப்பி'

109

என்னும் மதுரைக் காஞ்சிப் பகுதி (641-53), மதுரையில் ஊர்காவலர் பெருமழை பொழிந்த நள்ளிரவிலும் ஊக்கமாய்ச் சுற்றி வந்து ஊர் காத்தமையைத் தெரிவிக்கும்.

மருதநிலத் தலைநகரெல்லாம், அகழியாலும் பலவகைப் பொறிகளைக் கொண்ட கோட்டை மதிலாலும் சூழப் பெற்றிருந்தன. கிரேக்கரும் உரோமரும் மதில் வாயில் காவலராயிருந்தனர்.

66

கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடேல்வாள் யவனர்"

(சிலப்.14:667)

கரி பரி தேர் கால் என்னும் நால்வகைப் படைகள் வேந்தனுக் கிருந்தன. தெரிந்தெடுக்கப்பெற்ற சிறந்த பொருநரைக் கொண்ட தனிப் படைப் பிரிவுகளுமிருந்தன. அவை “தெரிந்த” என்னும் அடைமொழியால் விதந்து கூறப்பட்டன.

எ-டு: "உத்தம சோழத் தெரிந்த அந்தள கத்தாளர்" (S.I.l.ii,97)

அந்தளகம் மெய்ம்மறை (கவசம்)

இனி, வேந்தன் மேல் அளவிறந்த பற்றுடையவராய், அவனுக்குத் துன்பம் நேர்ந்த வேளையில் உயிரைக்கொடுத்துக் காக்கவும் உடன் மாயவும் சூளிட்டுக் கொண்ட போர் மறவருமிருந்தனர். அவர் வேளைக்காரர் எனப்பட்டார். அவர் உயிர் கொடுத்தல் செஞ்சோற்றுக் கடன் கழித்தல் எனப்பட்டது.

வேந்தன் இறந்தபின், அல்லது துறந்தபின், அல்லது கழிபெரு மூப்படைந்தபின், அவன் மூத்த மகன், மூத்த மகன் இல்லாவிட்டால் இளைய மகன். மகனே இல்லாவிட்டால் மகள், மகளும் இல்லா விட்டால் தகுதியுள்ள நெருங்கிய உறவினன், முடிசூட்டப்பட்டார். தடாதகை யென்னும் கயற்கண்ணியார் பாண்டிநாட்டை யாண்டதையும், சேரமான் பெருமாள் நாயனார் சேரநாட்டை யாண்டதையும் காண்க. முடிசூட்டு விழாவிலும் வேந்தன் பிறந்த நாளாகிய வெள்ளணி விழாவிலும், பிற சிறந்த நிகழ்ச்சிகளிலும், கோப்பேருந்தேவியும் உடன் கொலுவிருப்பாள்.

காவிதி என்பது சிறந்த அமைச்சனுக்கும், ஏனாதி என்பது சிறந்த படைத் தலைவனுக்கும், வேள் அல்லது பிள்ளை என்பது சிறந்த குறுநில மன்னருக்கும், மாவரையன் என்பது சிறந்த அரசியற் கருமத் தலைவனுக்கும், எட்டி என்பது சிறந்த வணிகனுக்கும், சிறுதனம்,