உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

பெருந்தனம், தலைக்கோல் என்பன நாடகக் கணிகையர்க்கும், வேந்தன் அளிக்கும் பட்டங்களாகும்.

ஏனை + அரி = ஏனாரி (யானைகளை அழிப்பவன்) - ஏனாதி. த - ர ஒன்றிற்கொன்று போலியாக வரும். எ-டு: விதை - விரை, குரல் வளை - குதவளை(கொச்சையுலக வழக்கு). மாவரையன் -மாவரையம் - மாராயம். (தொல்.புறத்.8)

"மாராயம் பெற்ற நெடுமொழி யானும்"

அரசியல் வினைஞர் ஊதியத்திற்குக் கைம்மாறாகக் கொடுக்கப் பட்டது, நெல்லும் பொன்னுமாயின் சம்பளம் என்றும், நிலமானிய மாயின் உம்பளம் என்றும் பெயர் பெற்றன.

13.கல்வி

று

கல்வி ஒரு குலத்தர்க்கு மட்டும் என்று வரையறுக்கப்படாது, எல்லாத் தொழில் வகுப்பார்க்கும் பொதுவாயிருந்தது. இதை,

தந்தை மகற் காற்றும் நன்றி யவையத்து

முந்தி யிருப்பச் செயல்.”

என்னும் குறளாலும் (67)

ஈன்று புறந் தருதல் என்றலைக் கடனே

சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.”

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பா லொருவனும் அவன் கட் படுமே."

(புறம்.312)

(புறம்.183)

ன்னும் புறப்பாட்டுக்களாலும், பல்வேறு தொழிலார் கடை டக்கழகக் காலத்துப் புலவராயிருந்தமையாலும், அறியலாம்.

கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார், அறுவை வாணிகன் இளவேட்டனார், இளம் பொன் வணிகனார், மருத்துவன் தாமோதரனார், தண்காற்பூட் கொல்லனார், ஒலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் முதலிய புலவர் பல்வேறு தொழிலாரா யிருந்தமை காண்க.

கல்வி பெண்டிர்க்கு விலக்கப்படவில்லை. ஒக்கூர் மாசாத்தியர், ஒளவையார், காக்கை பாடினியார், நச்செள்ளையார், காவற்பெண்டு,