உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

111

குறமகள் இளவெயினி. நக்கண்ணையார், பாரி மகளிர், பூதப் பாண்டியன் தேவியார், பேய்மகள் இளவெயினி, மாறோக்கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், வெறிபாடிய காமக் கண்ணியார் முதலியோர் பெயர் வெளிவந்த கடைக்கழகக் காலப் புலத்தியர். அக்காலத்துக் குடித்தனப் பெண்டிர் தம் கல்வியறிவை யெல்லாம் இல்லறத்திற்கே பயன்படுத்தியமையால். அவருட் பெரும் பாலார் பெயர் வெளி வரவில்லை. காரைக்காலம்மையார் சிறந்த புலத்தியராயிருந்தும், கணவரால் விலக்கப்படும்வரை, அவர் பாவன்மை வெளிப்படாதிருந்தமை காண்க. சிவப்பிரகாச அடிகள் காலமான பதினேழாம் நூற்றாண்டிலும், திருக்காட்டுப்பள்ளியில் தெருவில் உப்பு விற்கும் பெண் ஒருத்தி, அடிகள் ”நிறைய வுளதோ” என்று பாடி வினவிய வெண்பாவிற்கு விடையாக,

தென்னோங்கு தில்லைச் சிவப்பிரகாசப்பெருமான்

பொன்னோங்கு சேவடியைப் போற்றினோம் - அன்னோன்

·

திருக்கூட்டம் அத்தனைக்கும் தெண்டனிட்டோம் தீராக் கருக்கூட்டம் போக்கினோம் காண்."

என்று கடுத்துப் பாடினமை காண்க. கடுத்தல் - விரைதல்.

,

புகழேந்திப் புலவர் காலமான 14-ஆம் நூற்றாண்டில், உழவன், கொல்லன், தட்டான், தச்சன், மஞ்சிகன் (முடி திருத்தாளன்) முதலிய பல்வகைத் தொழிலாளரும் சிறந்த செய்யுள் செய்யும் ஆற்றல் பெற்றிருந் தமையால், பண்டைக்காலக் கல்விப் பரப்பு அறியப்படும், ஆறலைக்கும் கள்வர் கூட அக்காலத்திற் கற்றுவல்ல பாவலராயிருந் திருக்கின்றனர்.

இக்காலத்திற்போல் கல்வித்துறை என்னும் அரசியல் துறை அக்காலத்தில்லை. மக்கள் தனிப்பட்ட முறையில், ஆசிரியனுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் கற்று வந்தனர்.

66

உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே."

என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியிருத்தல் காண்க. (புறம்.183)

கற்பிப்போர் கணக்காயன் என்றும் ஆசிரியன் என்றும் குரு அல்லது குரவன் என்றும் மூவகையர். கணக்காயன் எழுத்தும் சிற்றிலக்கியமும் உரிச்சொல்லும்(நிகண்டும்) கணக்கும் கற்பிப்போன்; ஆசிரியன், பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட மூவிலக்கணமும், அவற்றிற்கெடுத்துக் காட்டான பேரிலக்கியமும் கற்பிப்போன்; குரவன் சமய நூலும் பட்டாங்கு (தத்துவ) நூலும் கற்பிப்போன்.