உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

இள மாணவ மாணவியர்க்குக் கணக்கை மிகுதியாகக் கற்பிப் பவன் கணக்காயன்.

ஐயன் - ஆயன் = ஆசிரியன்.

ஆயன் - ஆயான் - தந்தை, தமையன்.

-

ஆயான் - ஆஞான் = தந்தை.

ஆயான் - ஆசான் = மூத்தோன்,ஆசிரியன்,

ஆசாள் = ஆசிரியன் மனைவி, தலைவி.

-

=

ஆசு + இரியன் - ஆசிரியன் = குற்றம் நீங்கியவன் அல்லது குற்றங் கெடச் சொல்பவன். ஆசு - குற்றம். இரிதல் -இரிஞன் = பகைவன். ஒ.நோ: கலையன் - கலைஞன். ஆசிரியரும் நூலாசிரியர். நுவலாசிரியர், உரையாசிரியர் என மூவகையர். நுவலுதல் கற்பித்தல். முதலிரு கழக நூலாசிரியரும் தம் நூல் களில் அகவற் பாவையே ஆண்டமையால், அப் பாவிற்கு நூற்பா, அகவல், ஆசிரியப்பா என்னும் பெயர்கள் தோன்றின. ஆசிரியன் என்னும் சொல்லை, ஆ சார்ய (a-carya) என்று பிரித்தும் திரித்தும் வடசொல்லாக்குவர்.

குரு =

1. பருமன்.

2.கனம்.

"பசுமட் குரூஉத் திரள் போல"

3. பெருமை (உரி.நி.).

4. அரசன் (பிங்.)

5. ஆசிரியன் (சூடா.)

6.img.

"குருமொழி சிரத்தில் தாங்கினான்”

(புறம்.32).

(காஞ்சிப்பு. இரேணு.11).

குரு - குருசில் - குரிசில் = பெருமையிற் சிறந்தோன், தலைவன்.

"போர்மிகு குருசில்"

"போர்மிகு பொருந குரிசில்"

குரு - குருவன் = சமய வாசிரியன். ஒ.நோ.

சிறு - சிறுவன்.

"வானோர் குருவனே போற்றி"

(பதிற்றுப். 31:36).

(திருமுரு.276).

(திருவாச.5,68).