உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

113

குருவன் - குரவன் = பெரியோன். அரசன், ஆசிரியன், தந்தை, தாய், தமையன் என்னும் ஐவரும் ஐங்குரவர் எனப்படுதலையும்;இரு பெற்றோரும் இரு முது குரவர் எனப்படுதலையும் நோக்குக.

குரு என்னும் சொல்லிற் ககரத்தை எடுத்தொலித்தும், குரவன் என்னும் சொல்லில் அதனோடு ஈறு திரித்தும், வடசொல்லாகக் காட்டுவர். குருசில் (குரிசில்) குருவன் என்ற வடிவுகள் வடமொழியில் இல்லை.

அக்காலத்திற் பெரும்பாலும் ஒவ்வோர் ஊரிலும் கணக்காயர் பள்ளி

இருந்தது.

66

கணக்காயர் இல்லாத வூரும் பிணக்கறக்கும்

மூத்தோரை யில்லா அவைக்களனும் - பாத்துண்ணும்

தன்மை யிலாளர் அயலிருப்பும் இம்மூன்றும்

நன்மை பயத்தல் இல”

(திரிகடுகம், 11).

கணக்காயர் பள்ளி பிற்காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடமாகச்

சிறுத்தது.

கணக்காயனிடம் கற்போனுக்கு மாணி, சட்டன், ஒலைக் கணக்கன் என்றும்; ஆசிரியனிடம் கற்போனுக்கு மாணவன், கற்றுச்சொல்லி, மழபுலவன் என்றும்,குரவனிடம் கற்போனுக்குக் கேட்போன் என்றும்; பெயர்.

மணி என்பது சிறுமை அல்லது குறுமைப் பொருள்தரும் முன்னொட்டு. மணிக்குடல், மணித்தக்காளி, மணிப்புறா என்னும் வழக்கை நோக்குக. மணி - மாணி = சிறுவன், கற்போன்.

சட்டம் = எழுதும் ஓலை. சட்டம் - சட்டன் = ஒலைச்சுவடி படிப்போன். சட்டநம்பி = திண்ணைப்பள்ளி மாணவர் தலைவன். சட்டநம்பிப் பிள்ளை - சட்டாம் பிள்ளை.

"ஒலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்”

என்பது நாலடியார் (397)

<<

ஒரு சட்டனை ஒரு சட்டன் பிழைக்கப் பேசுவானாகில்" என்பது கல்வெட்டு (T.A.S.I..9)

சட்டன் என்னும் சொல்லைச் சாத்ர (chatra) என்று திரித்து, அதனையே தென்சொற்கு மூலமாகக் காட்டுவர் வடமொழியாளர்!

மாணி மாணவன்

-

-

மாணவகன் மாணாக்கன். மாணவன் மாணவ(வ.). மாணவகன் - மாணவக(வ.). மாணி - மாணாக்கன் என்னும் வடிவங்கள் வடமொழியில் இல்லை. மாணவம் என்பது கல்வி.