உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

கற்கப்படும் ஏட்டுக் கற்றைகள், ஏடு. சுவடி, பொத்தகம், பனுவல், நூல் எனப் பலபெயர் பெறும். முன் மூன்றும் ஒலைக் கற்றையைச் சிறப்பாகவும், பின்னிரண்டும் உட்பொருளைச் சிறப்பாகவும், குறிக்கும்.

பொத்தகம் என்பதே பழைய வடிவம்.

"நிறை நூற் பொத்தகம் நெடுமணை யேற்றி"

'வரிநெடும் பொத்தகத்து’

(பெருங். உஞ்சைக்.34,26)

(கோயில் நான்மணி மாலை)

'வரிப் பொத்தகம்' (T.A. S.I.i,166)

பொத்துதல் சேர்த்தல். சுவடி சேர்த்தல் என்னும் வழக்கை நோக்குக. பொத்தகம் - புஸ்தக (வ) - புஸ்தக்(இ). பனுவல் பாடல் (பிரபந்தம்). நூல் என்பன இலக்கணமும் அறிவயலும்.

கற்கும் இடங்கள் பள்ளி (திவ். பெரியதி. 2,3,8) என்றும், ஓதும் பள்ளி (திவா) என்றும், கல்லூரி (சீவக.995) என்றும் பெயர் பெற்றன.

பள்ளி = படுக்கை, படுக்கையறை, படுக்கும் வீடு. வீடு போன்ற கோயில் அல்லது மடம், கல்வி கற்கும் மடம், கல்விக்கூடம் பள்ளி-பல்லி (621.).

பள்=

பள்ளம், தாழ்வு, தாழ்வாகக் கிடத்தல், தூங்குதல்.

பள் - படு - படை, படுக்கை.

கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பிருந்தது. வேந்தரைப் புகழ்ந்து பாடிய புலவர்க்குச் சிறந்த பரிசும் முற்றூட்டும் (சர்வ மானியமும்) அளிக்கப்பட்டன.

பாண்டியர் தலைசிறந்த புலவரை யெல்லாங்கூட்டி, தமிழ்க் கழகம் நிறுவிப் போற்றினர்.

புலவரின் பாடல்களும் நூல்களும், பாண்டியர் தமிழ்க் கழகத்தில் குற்றமற்றவையென ஒப்புக்கொள்ளப் பட்டாலொழிய, உலகில் வழங்கா. அங்ஙனம் ஒப்பம் பெறுதல் அரங்கேற்றம் எனப்பட்டது.

நாடகக் கணிகையரின் ஆடல் பாடல்களும் வேந்தர் முன்னிலையிலேயே அரங்கேற்றப்பட்டன. அரங்கேறிய கணிகையர் தலைக்கோற்பட்டமும் ஆயிரத்தெண் கழஞ்சு பரிசமும் பெற்றனர்.

இத்தகைய அரங்கேற்ற முறையால், அக்காலத்துக் கல்வி தலைசிறந் திருந்தது. அரைப் படிப்பினரும் திரிபுணர்ச்சியரும் தலையெடுக்க இட