உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

115

மில்லை, பல துறையிலும் புலமை பெற்ற பேரறிஞர், தவறாகக் கற்பித்து மக்களைக் கெடுப்பவரைக் கொடிகட்டி அறைகூவி வரவழைத்து, சொற் போர் புரிந்து தோற்கடித்துத் தண்டித்து அறிவு புகட்டுவதும் அக்கால வழக்கம்.

பல்கேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர்

உறழ்குறித் தெடுத்த உயர்கெழு கொடி

(பட்டினப்.167-171)

(கடைக்கழகக் காலத்துப் பல்வேள்வி முதுகுடுமிப் பெருவழுதி ஆரியத்தைப் போற்றித் தமிழைப் புறக்கணித்த பின், கழகம் கலைக்கப்படடது. பிழைப்பு வழியில்லாப் புலவரெல்லாரும், பெரும்பாலும் சிற்றரசரை யடுத்தும் புகழ்ந்தும் வாழ்ந்தனர்.)

கல்வி என்னும் சொல், கல் என்னும் முதனிலையினின்று தோன்றிய தாகும். கல்லுதல் தோண்டுதல், மாந்தன் முதன் முதற் கற்ற கல்வி உ உழவுத் தொழிலாதலால், கல்வி என்னும் சொல் முதலில் உழவுத் தொழிலையே குறித்திருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் நிலப் பண்பாட்டையும் உளப்பண்பாட்டையும் ஒருங்கே உணர்த்தும் Culture, Cultivation என்னும் இரு சொற்களும், Col என்னும் ஒரே இலத்தீன் வேர்ச் சொல்லினின்று தோன்றியிருப்பது, இங்குக் கவனிக்கத் தக்கது. கல்- Col - Culture. 14.கலைகள்

பயிற்சியாற் கற்கப்படுவன கலைகள்.

(1) இசை

குமரிக்கண்டத் தமிழர் நுண்மாண்நுழை புலத்தராயும் தலைசிறந்த நாகரிகராயும் எஃகுச் செவியராயு மிருந்ததினால், ஏழு பேரிசையும் ஐந்து சிற்றிசையுமாகிய பன்னீரிசையை (சுரத்தை)யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழுபாலைப் பண்களைத் திரித்ததுமன்றி, அப்பன்னீரிசையையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும் சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும், நுட்பமாய்ப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருக்கினறனர். பன்னீரிசைக்கு மேற்பட்ட நுண்ணிசையினை எடுத்துக் கூறும் நூலே 'இசை நுணுக்கம்' போலும்! ஏழிசையும் குரல், துத்தம், கைக்களை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயர் பெற்றன. சிற்றிசை ஆகணம் என்றும், குரலும் இளியுமல்லாத பேரிசை அந்தரம் என்றும் சொல்லப்பட்டன.

திரி, சதுரம் என்னும் சொற்கள் தமிழே என்பது என் வடமொழி வரலாற்றில் விளக்கப்பெறும். சதுர் என்பது, நான்கு என்னும் எண்ணுப்