உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

பொருளிலன்றி, நாற்கோணம் என்னும் வடிவுப்பொருளில் வடமொழி யிலில்லை.

அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் என்னும் பண் வகுப்பும், கிழமை நிறைகுறை என்பனவும், தமிழரின் சை நுணுக்கத்தைக் காட்டும்.

இக்காலத்து ஆரிய இசையறிஞர், பண்டைத் தமிழரின் அறிவு நுணுக்கத்தை ஓராது, தம்போல் அவரையுங் கருதி 96 இசைகள் பாடற்கியலாதவை என்பர்.

இசைக் கருவிகள் தோல், துளை, நரம்பு, வெண்கலம் (கஞ்சலம்) என நால்வகைப் பட்டிருந்தன.

தோற் கருவிகள் ஆடல் முழா, பாடல் முழா, பொது முழா என்றும்; அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாள் முழவு, காலை முழவு, என்றும்; மணப்பறை, பிணப்பறை என்றும்; வகுக்கப்பட்டிருந்தன. பறை என்பது தோற்கருவிப் பொதுப் பெயர். "தெய்வம் உணாவே மாமரம் புட்பறை”(தொல்.964).

இன்னிசைத் துளைக் கருவிகள் புல்லாங்குழல், இசைக் குழல் (நாதசுரம்), முகவீணை என்னும் ஏழிசைக் குழல்களாகவும்; ஒத்து (ஊமைக் குழல்), என்னும் ஓரிசைக் குழலாகவும்; இருவகைப் பட்டிருந்தன. தாரை, சின்னம், வாங்கா, கொம்பு, சங்கு முதலிய ஒரிசைத் துளைக் கருவிகள், ஊர்வலம் போர் முதலிய நிகழ்ச்சிகளில் ஆரவார இசைக் கருவிகளாய்ப் பயன் படுத்தப்பட்டன. மகுடி என்பது நல்ல பாம்பை மயக்குதற்கென்றே அமைக்கப்பட்ட ஏழிசைச் சிறப்பின்னிசைக் குழலாகும்.

நரப்புக் கருவிகள் ஒரு நரம்புள்ள சுரையாழிலிருந்து ஆயிரம் நரம்புகள் பெருங்கலம் (ஆதியாழ்) வரை, பல்வேறு வகைப் பட்டிருந்தன. அவற்றுள், பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங் கோட்டியாழ் என்னும் நான்கும் சிறந்தவை. அவற்றுள்ளும் தலைசிறந்தது செங்கோட்டியாழ். அதுவே பின்னர் வீணையாகத் திரிந்தது. ஆயிரம் நரம்பென்பது, ஆயிரங்காற் பூச்சி என்பதிற்போல், நரம்பின் பெருந்தொகையையே குறிக்கும்.

“இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்" என்னும் திருவாசகக் கூற்று (369) செங்கோட்டியாழ் வீணையென்று சிறப்புப் பெயர் பெற்றமையையே காட்டும். எல்லா நரப்புக்ருவிகளும் யாழே. வீணை என்னும் பெயரும் விண் என்னும் வேரினின்று பிறந்த தென் சொல்லே. அது வடமொழியில் வீணா என்று திரியும். விண்ணெனல் நரம்பு தெறித்தொலித்தல். விண் - வீணை முதுகுன்றம் (பழமலை) விருத்தாசல மென்ற பெயர் மாறியதால் வேறு