உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

119

பண்களையும் வகுத்தும், பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப்பெயர் களையும் வடசொல்லாக மாற்றியும், கருநாடக சங்கீதம் எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி யென்றும், நிலையை ஸ்தாய் என்றும், மொழிபெயர்த்திருத்தல் காண்க. கருநாடக சங்கீதத்திற்கு இலக்கணம் வகுத்த வேங்கடமகியும் (17-ஆம் நூற்.)அதற்கு இலக்கிய மாகத் தெலுங்கு கீர்த்தனைகள் பாடிய தியாகராசரும் (18-ஆம் நூற்.) தமிழ்நாட்டில் வாழ்ந்தவரே.

கொட்டு, அசை, தூக்கு, அளவு என்னும் நாலுறுப்புக்களை யுடைய தாளத்தை, அகக் கூத்திற்குரிய பதினொரு பாணிகளும் புறக்கூத்திற்குரிய நாற்பத்தொரு தாளமுமாக, ஐம்பத்திருவகைப் படுத்தியிருந்தனர்.

ஏழிசைக்குரிய எழுத்துக்கள் முதற்காலத்தில் ஏழ் உயிர் நெடில்களா யிருந்தன. அவை நிறவாளத்தி என்னும் சிட்டையிசைக்கு ஏற்காமையால் சரிகமபதநி என்னும் எழுத்துக்கள் நாளடைவிற் கொள்ளப்பட்டன. இவை சட்ஜம், ரிசபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் என்னும் வடசொற்களின் முதலெழுத்துக் களாகச் சொல்லப்படுகின்றன. இக்கொள்கை மத்தியமம் பஞ்சமம் என்னும் இரண்டிற்கே ஏற்கும். சமன் பட்டடை என்னும் இரு தென் சொற்களின் முதலெழுத்துக்களே ச ப என்பது, சிலர் கருத்து. இவையிரண்டுமன்றி, இசை சையின்பத்திற்கேற்ற ஏழெழுத்துக்கள் நாளடைவிற் பட்டறிவினின்று தெரிந்த கொள்ளப்பட்டன என்பதே. பெரும்பால் தமிழிசைவாணர் கருத்தாம்.

பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை, இசைப்பாணரும் யாழ்ப் பாணரும் குழற்பாணரும் மண்டைப் பாணரமான நால்வகைப் பாணரே பெரும்பாலும் தமிழ் நாட்டில் இசைவாணராயிருந்து தமிழிசையைப் போற்றி வந்தனர். "பாண் சேரியில் பாட்டுப் பாடுகிறாதா?.” என்னும் பழமொழியும், திருமுறைகண்ட சோழன் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பெண்ணைக் கொண்டு தேவாரத்திற்கு இசை வகுப்பித்தமையும், இதைவலியுறுத்தும். ஆரியக் குலப்பிரிவினை ஏற்பட்டபின்,பாணர் தீண்டாதவாராகித் தம் தொல்வரவுப் பாண்தொழிலை இழந்தனர். எழூஉம் இசை தொகையினின்று தோன்றிய ஏழ் என்னும் எண்ணுப் பெயரும்.

66

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப.'

என்னும் தொல்காப்பிய நூற்பாவும் (அகத். 18), தமிழிசையின் தொன்மையை உணர்த்தும். "இனி இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவ விருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீய முதலாவுள்ள தொன்னூல்