உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

களுமிறந்தன” என்னும் அடியார்க்கு நல்லார் கூற்றால், வடமொழி யிசைநூல் கட்கெல்லாம் தமிழ்நூல்களே முதனூலென அறிக.

65

அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய

நரம்பின் மறைய என்மனார் புலவர்."

என்னும் தொல்காப்பிய நூற்பாவால்(33), தமிழிசையின் யாழ்ச் சிறப்பு உணரப்படும். இதன் விரிவை என் 'முத்தமிழ்' என்னும் நூலிற் காண்க. (2) நாடகம்

நாடகம் என்பது தென்சொல்லே. நள்ளுதல் = பொருந்துதல், ஒத்தல். நள் - நளி என்பது ஓர் உவமவுருபு. நளிதல் ஒத்தல். நளி - டி ஒ.நோ: களிறு - கடிறு. நடித்தல் என்பது, இன்னொருவனைப் போல் அல்லது இல்லாததை உள்ளது போலச் செய்து காட்டுதல்.

அணி.

நடி - நடம் - நட்டம் - ந்ருத்த (வ.)

ஒ.நோ: வட்டம் - வ்ருத்த (வ.)

நட்டம் - நட்டணம், நட்டணை

நட்டம் - நட்ட (பிரா)

ஒ.நோ: வட்டம் - வட்டணம், வட்டணை

நட்டணம் - நர்த்தன (வ.)

நட்டம் - நட்டுவன். ஒ.நோ: குட்டம் - குட்டுவன்

-

நடி - நடனம். ஒ.நோ: படி படனம் = படிப்பு

நடி - நாடகம். ஒ. நோ படி-பாடகம் = பாதத்திற் படிந்த கிடக்கும்

முத்தமிழ் தொன்றுதொட்ட இயலிசை நாடகம் என்றே வழங்கும். நாடகக் கலை கூத்து, நடனம், நாடகம் என முத்திறப்படும்.

குதித்தாடுவது கூத்து. அது வேத்தியல், பொதுவியல்; உலகியல், தேவியல்; வசைக் கூத்து, புகழ்க் கூத்து; வரிக்கூத்து, வரியமைதிக் கூத்து (வரிச்சாந்திக் கூத்து); அமைதிக் கூத்து (சாந்திக் கூத்து), வேடிக்கைக் கூத்து(விநோதக் கூத்து); அகக் கூத்து, புறக் கூத்து, விளையாட்டுக் கூத்து, வினைக் கூத்து; வெற்றிக்கூத்து, தோல்விக் கூத்து; எனப்பல்வேறு வகையில் இவ்விருவகைப்படும்.