உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

இது (புறம்.208), பெருஞ்சித்திரனார் அதிகமான் நெடு மானஞ்சி யிடம் பரிசில்பெறச் சென்றபோது, அவன் அவரைக் காணாமலே பரிசு கொடுத்தனுப்ப, அவர் அதை வாங்காது,

"பல குன்றுகளையும் மலைகளையும் கடந்து பரிசில் பெற வந்த என்மீது அன்பு கொண்டு இப்பொருளைக் கொண்டு இப்படிச் செல்க என்று சொல்வதற்கு, அவன் என்னை எப்படி அறிந்தான்? என்னைக் காணாமற் கொடுத்த இப்பரிசிலைப் பெறுவதற்கு நான் ஒரு வணிகப் பரிசிலன் அல்லேன். தினையளவாயினும் என் தகுதியறிந்து மதித்துக் கொடுத்தால் நான் பெறுவேன்.” என்று கூறியது.

"சான்றோர் புகழு முன்னர் நாணுப

என்பது (குறுந்.252), அறிஞர் புகழ்ச்சியை விரும்பாமையைத் தெரிவிக்கும்.

66

புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி

கல்லா வொருவன் உரைப்பவுங் கண்ணோடி நல்லார் வருந்தியுங்கேட்பரே மற்றவன் பல்லாருள் நாணல் பதிந்து."

என்னும் நாலடிச் செய்யுள் (155), கல்லாத ஒருவன் ஓர் அவையில் பொருளற்ற வுரை நிகழ்த்தினாலும், அவன் பலர் முன் வெட்கப் படுவதற்கு இரங்கி, வருத்தத்தோடும் அறிஞர் கேட்டுக் கொண்டிருக்கும் பண்பாட்டைத் தெரிவிக்கின்றது.

சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்றனாக வந்தானென்று கொல்லப்புகும் போது, கோவூர் கிழார்,

"வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி"

என்னும் பாட்டைப் பாடி (புறம்.47), அப்புலவனைத் தப்பிவித்தார்.

சோழன் குளமற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமானின் இரு குழந்தைகைளை யானை மிதித்துக் கொல்லும்படி இடப் புகுந்தபோதும், கோவூர்கிழாரே “நீயே, புறவின் அல்ல லன்றியும்” என்னும் பாட்டைப் (புறம்.46), அக்குழந்தைகளைத் தப்புவித்தார்,

பாடி

அக்காலத்துப் புலவர் அரசரையடுத்து, அரசியல் தவறுகைளை எடுத்துக்காட்டி அவற்றைத் திருத்தவும், பொதுநலத் திட்டங்களை வகுத்துக் கொடுத்து அவற்றை நிறைவேற்றவும், அறிவுரை கூறி வந்தனர்.

66

காய்நெல் லறுத்துக் கவளம் கொளினே

மாநிறை வில்லதும் பன்னாட் காகும்