உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ்ப் பண்பாடு

நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும் அறிவிடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

யானை புக்க புலம்போலத்

தானும் உண்ணான் உலகமும் கெடுமே."

167

இது (புறம்.184), பிசிராந்தையார் பாண்டியன் அறிவிடை நம்பிக்குக் கூறிய அறிவுரை.

இதன் பொருள் : "விளைந்த நெல்லையறுத்து யானைக்குக் கவளங் கொடுத்தால், ஒருமாவிற்குக் குறைந்த நிலமும் பல நாளைக்கு வரும். நூறு செய் அளவு நன்செயானாலும் யானை தானே தின்னும்படி விட்டு விட்டால், அதன் வாய்க்குள் புகுவதை விட அதிகம் அதன் கால்பட்டுச் சேதமாகும். அறிவுடைய அரசன் நல்ல வழியில் வரிதண்டினால், அவன் நாடு கோடி பொருளைத் தொகுத்துக் கொடுத்துத் தானும் மிகக் தழைக்கும். அவன் அறிவு கெட்டு நாள்தோறும் தகுதியறியாத வீண் ஆரவாரக் கூட்டத்தோடு கூடி, வலிந்து கவரும் பெரும் பொருள்திரளை விரும்பினால், யானை புகுந்த நன்செய் போலத் தானும் உண்ணான்; நாடும் கெடும்” என்பது.

சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றியிருந்த காலத்தில் கோட்டை வாயிலை அடைத்துக்கெண்டு உள்ளே சும்மாயிருந்த நெடுங்கிள்ளியை நோக்கிக் கோவூர்க்கிழார்,

"கரிய பெண்யானைக் கூட்டத்தோடு பெரிய குளத்திற் போய்ப் படியாமலும், நெற் கவளத்தோடு நெய்ம் மிதிக் கவளமும் பெறாமலும், திருந்திய பக்கத்தை யுடைய வலிய கம்பம் கெடச்சாய்த்து நிலத்தின் மேற் புரளும் கையை யுடையனவாய், வெப்பமாக மூச்சுவிட்டு வருந்தும் யானை இடியோசை போல முழங்கவும், பாலில்லாத குழவி அழவும், பெண்டிர் பூவில்லாத வெறுந் தலையை முடிக்கவும், நீரில்லாத அழகிய வேலைப் பாடுள்ள நல்ல மனைகளிலுள்ளவர் வருந்திக் கூக்குரலிடுதல் கேட்கவும், நீ இங்கு இனிதாக இருத்தல் தீயதாகும். கிட்டுதற்கரிய வலிமையுள்ள குதிரையையுடைய அரசே! நீ அறத்தை மேற்கொண்டால் இதோ நகர் உனதன்றோ என்று சொல்லித் திறந்துவிடு; மறத்தை மேற்கொண்டால் போர் செய்து கொண்டு திறந்துவிடு. இவ்விரண்டுமன்றி, உறுதியான நிலையொடு கூடிய கதவினையுடைய மதிலுக்குள் ஒரு பக்கத்தில் ஒடுங்கிக் கிடத்தல், ஆராயுங் காலத்து, வெட்கப்படத்தக்க செய்தியாகும்." என்று