உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

அஞ்சாது இடித்துரைத்தார். (புறம்.44).

சோழன் நலங்கிள்ளி இன்னொரு சமையம் உறையூரை முற்றுகை செய்திருந்தபோதும், நெடுங்கிள்ளி கோட்டை வாயிலை அடைத்து உள்ளேயிருந்தான். அன்றும் கோவூர்கிழார் தலையிட்டு அவ்விருவர் செயலும் அவர் குடிக்குப் பொருந்தாமையைக் காட்டிப் போரை நிறுத்தினார்.

கோப்பெருஞ்சோழன் தன்னொடு மாறுபட்ட தன் மக்கள் மேற் போருக்குச் சென்றபோது, புல்லாற்றூர் எயிற்றியனார் அதன் இழிவையும் பயனின்மையையும் எடுத்துக் காட்டித் தடுத்து, அவனை நல்வழிப் படுத்தினார். (புறம்.213).

எழுபெரு வள்ளல்களுள் ஒருவனாகிய வையாவிக் கோப்பெரும் பேகன் தன் தேவியாகிய கண்ணகியைத் தள்ளிவிட்டபின்,அவள் பொருட்டுக் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் நால்வர்,கல்லுங் கரையக் கனிந்து பாடியுள்ளனர். (புறம். 143-7).

,

குடபுலவியனார் என்னும் புலவர் பாண்டியன் நெடுஞ்செழி யனிடம் சென்று,

"மல்லல்முதூர் வயவேந்தே

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்

ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி

ஒருநீ யாகல் வேண்டினும் சிறந்த

நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்

தகுதி கேள் இனி மிகுதி யாள

நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரி யோர்ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே வித்திவான் நோக்கும் புன்பலம் கண்ணகன் வைப்பிற் றாயினும் நண்ணி ஆளும்

இறைவன் தாட்குத வாதே அதனால் அடுபோர்ச் செழிய இகழாது வலலே நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண்தட் டோரே

தள்ளா தோர் இவண் தள்ளா தோரே. '