உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

திகழ்தலைக் குறிக்கும் கன்னெனும் சொல் வலிந்து பொருத்து வதாகும். சிறுமையைக் குறிக்கும் கன என்னும் சொல் பூப்படைந்த பெண்ணிற்குப் பொருந்தாது. மிகச் சிறியதைக் குன்னியென்பது தமிழ்மரபு. குல் - குன் - குன்னி. குல் - குள் - குறு, நன்னியும் குன்னியும் என்பது பாண்டி நாட்டுவழக்கு. கன் - குன் - கன் (kana).

கன்னுதல் என்பது பழுத்தலைக் குறிக்கும் ஓர் அருந்தமிழ்ச் சொல். வெப்பத்தினலாவது அழுத்தத்தினாலாவது உள்ளங்கையிலும் உள்ளங் காலிலும் அரத்தங்கட்டிச் சிவந்துவிட்டால் அதை அரத்தங் கன்னுதல் என்பர்.கனி (பழம்) என்னும் சொல் கன்னி (பழுத்தது) என்பதன் தொகுத்தலே. நகு என்னும் முதனிலை வழக்கற்றுப் போனபின், நகை என்னும் தொழிற்பெயர் முதனிலையாய் வழங்குவது போன்றதே கனி என்னும் முதனிலையும். பூப்பு என்னும் சொற் போன்றே, கன்னுதல் என்பதும் நிலைத்திணைக்குரிய தாயிருப்பதும், mature என்னும் ஆங்கில வழக்கும், இங்குக் கருதத்தக்கன.

மூவேந்தர் குடிப்பெயர்

பழங்குடி என்னும் சொற்கு, சேர சோழ பண்டியர் போலப் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வருங்குடி என்று, பரிமேலழகர் உரைத்தற் கேற்ப,

"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

என்று தொல்காப்பியரும் (செய்.78) மூவேந்தர் குடித்தொன்மை யையும் சிறப்பையும் குறிப்பிட்டுள்ளார்.

முதற்காலத்தில் முடியணியும் உரிமை சேர சோழ பாண்டியர்க்கே யிருந்ததால், அவர் தலைமையாயிருந்த காலமெல்லாம் கடைக்கழகக் காலத்திற்கு முன்னரேயே. குறுநில மன்னர் பலர் மூவேந்தர்க் கடங்கா மையை, கடைக்கழகப் பனுவல்களும் பாடல்களும் தெரிவிக்கின்றன. அதன்பின். களப்பாளர் (களப்பிரர்) ஆட்சியும் பல்லவர் ஆட்சியும் பிறமொழியாளர் ஆட்சியும் இடையிட்டிடையிட்டு வந்துவிட்டன.

ஆ ஆரியர் வருமுன், நாவலந்தேயம் முழுதும் மூவேந்தர் நேரடி ஆட்சிக் குட்படாவிடினும் அதிகாரத்திற்குட்பட்டிருந்தது. மதி, கதிரவன், நெருப்பு ஆகிய முச்சுடரையும், முறையே, பாண்டியரும் சோழரும் சேரருமே தம்குல முதலாகக் கொண்டிருந்தனர்.

பாண்டியன்

மூவேந்தருள்ளும் பாண்டியன் முந்தியவன் என்பது,