உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

சுல் (வளை) சூழ்.

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

துல் (பொருந்து) - தோழம் - தோழன். புல் (துளை)- பூழை. பொல் (பிள) - போழ்.

தசரதனின் முன்னோராகச் சொல்லப்பட்ட முசுகுந்தன், சிபி முதலியோர் வட நாட்டையும் ஆண்ட சோழ மாவேந்தரே.

வெற்றிவேல் மன்னற் குற்றதை ஒழிக்கெனத்

தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை”

என்பது (சிலப். 5:65-67), முசுகுந்தனையும்,

தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் விண்ணவர் தலைவனை வணங்கிமுன் நின்று மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள் மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த

நாலேழ் நாளினும் நன்கினி துறைகென அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது"

9)

(அணிமே. 1: 4-

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத் தன்னகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி யஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன் மருக"

(புறம்.43:5-8)

என்பன, சிபியையும் அவன் வழியினரையும் உறையூரிலும் புகாரிலிலு மிருந்தாண்ட சோழ வேந்தராகவே குறிப்பாயுணர்த்துதல் காண்க. சிபி என்பதன் தமிழ் வடிவம் சிம்பி அல்லது செம்பி என்றிருந்திருக்கலாம். வரலாற்றிற்கு முந்திய காலத்தில், சோழனுக்குப் பனிமலைவரையும் ஆட்சியிருந்ததாகத் தெரிகின்றது. ஏறத்தாழ ஈராயிரங்கல் தெற்கே நீண்டிருந்த குமரிக் கண்டம் பழம்பாண்டி நாடாயிருந்ததை நோக்கும் போது, பனிமலைவரை சோழனாட்சி பரவியிருந்தது வியப்பாகத் தோன்றாது. வேங்கடத்திற்கு வடக்கிலுள்ள கொடுந்தமிழ்நாடு வடுக நாடாய்த் திரிந்தபின், அந்நாட்டுச் சோழர் குடியினர் சோடர் எனப்பட்டார்.

சேரன்

மேற்புறமாயினும் கீழ்ப்புறமாயினும், சேரநாடு முழுவதும் பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரச் சரிவே. மலையடிவாரம் சாரல் எனப்படும்.