உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

ஒருவனிடத்தில் ஒன்றைக் கேட்கும் போது, தாழ்ந்தவன், "ஈ என்றும், ஒத்தவன், "தா” என்றும், உயர்ந்தவன், “கொடு” என்றும், சொல்லவேண்டுமென்பது தமிழ்மரபு.

ஒன்றுபடுத்தல்

யானைக்கும் தேன் வண்டிற்கும் முகத்தின் முன் ஓர் உறிஞ்சி (pro- boscis ) உள்ளது. இந்த ஒப்புமையைக் கண்ட முதற்காலத் தமிழர், இரண்டிற்கும் தும்பி எனப்பொதுப் பெயர் இட்டனர். தூம்பு - தும்பு - தும்பி = தூம்பு (குழாய்) போன்ற உறுப்பையுடையது.

இனப்படுத்தல்

ஒரு பொருளை, உடம்பின் அல்லது உறுப்பின் வடிவில், ஒத்த வேறு பொருள்களைக் கண்ட பண்டைத் தமிழர், முன்னதன் பெயர்க்கு அடை கொடுத்துப் பின்னவற்றிற்கிட்டு, அவற்றையெல்லாம்

படுத்தியிருக்கின்றனர்.

ஓரினப்

எ.டு: வேம்பு, கறிவேம்பு, நாய்வேம்பு, நிலவேம்பு, நீர்வேம்பு. வேம்பைப் பிறவற்றோடு ஒப்புநோக்கி நல்ல வேம்பு என்றனர்.

இடுகுறியின்மை

"எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”

என்பது தொல்காப்பியம் (640). ஆனால், பல சொற்கட்டுப் பார்த்தமட்டில் பொருள் தோன்றாது. அவற்றை ஆழ்ந்து ஆராய வேண்டும். இதனையே,

"மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா"

என்று தொல்காப்பியம் (877) குறிப்பிடுகின்றது.

பலா, பனை, பொன், மரம் முதலியவற்றை மொழி நூலறிவும் சொல்லாராய்ச்சியுமில்லா இலக்கண வுரையாசிரியர், இடுகுறி யென்று குறிப்பது வழக்கம்.

பலா பருத்த பழத்தையுடையது. பல் - பரு - பருமை.

ஒ.நோ: சில் - சின் - சிறு. சின்மை = சிறுமை.

"சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு ”

பனை கருக்குமட்டையுடையது. பல்

-

பன்

=

(குறுந். 18).

அறுவாட்பல்,

பன்னறுவாள், பன்வைத்தல் என்னும் வழக்குக்களை நோக்குக. பன்

பனை = கூரிய பற்போன்ற கருக்குள்ளது.

-