உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

25

பொன் பொற்பு அல்லது பொலிவுள்ளது. பொல்-பொலி-பொலிவு. பொல் - பொற்பு = அழகு. பொல் - பொலம் - பொலன். பொல்-பொன். பொற்ற - = அழகிய (சீவக. 270). பொல்லா = அழகில்லாத (ஔவையார்) பொற்றது = பொலிவுற்றது (சீவக. 649).

மரம் உணர்ச்சியற்றது. கால் உணர்ச்சியற்றால், மரத்துப் போய் விட்டது என்பது வழக்கம். உணர்ச்சியற்றவனை மரம்போலிருக் கிறான் என்பர். மதமதப்பு = உணர்ச்சியின்மை, திமிர். மதம் - மரம். மதத்தல் = மரத்தல். ஒ. நோ: விதை - விரை.

இடுகுறியில்லாமலே ஒரு பெருந் தாய்மொழியை ஆக்கியது, பண்டைத் தமிழரின் நுண்மாண் நுழை புலத்தைச் சிறப்பக் காட்டும். இயற்கைச் சொல்லாக்கம்

தமிழில் எல்லாச் சொற்களும் இயற்கையான முறையில் அமைந்தவை. வடமொழியில் 'ஆ'என்னும் முன்னொட்டால் எதிர்ப்பொருள் வினைச்சொற்களை அமைத்துக் கொள்வர்.

எ.டு: கச்சதி

=

=

செல்கிறான். ஆகச்சதி = வருகிறான். தத்தே கொடுக்கிறான், ஆதத்தே = எடுக்கிறான். இத்தகைய செயற்கையமைப்பு தமிழில் இல்லை.

தூய்மை

குமரிக் கண்டத்தில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்க வில்லை. வெளிநாட்டிலிருந்து பொருள்கள் வரின், அவற்றிற்கு உடனுடன் தூய தமிழ்ப் பெயர்கள் அமைக்கப்பட்டன.

கரும்பு சீன நாட்டினின்று அதிகமானின் முன்னோராற் கொண்டு

வரப்பட்டது.

"அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்

அருப்பெறன் மரபிற் கரும்பிவட் டந்தும்

நீரக விருக்கை யாழி சூட்டிய

தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல"

என்று ஒளவையார் பாடியிருத்தல் காண்க. (புறம். 99) சீன நாட்டை வானவர் நாடென்பது பண்டை வழக்கு. கருப்பு நிறமானது கரும்பு.

மிளகாய் அமெரிக்காவினின்று வந்ததாகக் கருதப்படுகின்றது. மிளகு

+ காய் மிளகாய். மிளகுபோற் காரமுள்ள காய் மிளகாய். இவ் வழக்கைப் பின்பற்றியே, உருளைக்கிழங்கு, புகையிலை, நிலக் கடலை, வான்கோழி முதலிய பெயர்களும் பிற்காலத்திற் ஏற்பட் டுள்ளன.