உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

27

வடமொழியில், மனைவியைக் குறிக்கும் தார, பார்யா, களத்திர என்னும் முச்சொற்களுள், முதலது ஆண்பால்; இடையது பெண்பால்; கடையது அலிப்பால். பொத்தகத்தைக் குறிக்கும் சொற்களுள், 'கிரந்த' ஆண்பால்; 'ச்ருதி' பெண்பால்; ‘புஸ்தக’ அலிப்பால். இதினின்று அம்மொழியின் ஒழுங்கை அறிந்து கொள்க. பாலிசைவு

தமிழ்ச் சொற்றொடர்களில், எழுவாயும் பயனிலையும் பெரும் பாலும் திணைபால் எண் இடம் ஒத்தேயிருக்கும். திணைபால் எண் இடமயக்கம் இருப்பினும் தெளிவாய்த் தெரியும்.

வடமொழியில், 'தத் கச்சதி' என்பது அவன் போகிறான், அவள் போகிறாள், அது போகிறது, என்று பொருள்படுவது போன்ற சொற்றொடரமைப்பு தமிழில் இல்லை.

புலமக்கள் அமைப்பு

உரைநடை, செய்யுள் என மொழிநடை இருவகைப் படும். இவற்றுள் செய்யுள் புலமக்கள் அமைப்பாகும். அது பாட்டும் பாவும் என இரு வகையாம். உரைநடை பண்பட்டு இசைப் பாட்டாகவும், இசைப் பாட்டு பண்பட்டுச் செய்யுளாகவும், திருந்தும். ஆகவே, செய்யுளே மொழியின் உச்ச நிலையாம்.

குமரிக்கண்டத் தமிழர், செய்யுட் கலையின் கொடு முடியேறி, அறுவகை வெண்பாக்களையும், நால்வகை அகவற்பாக்களையும், நாலும் ஐந்தும் ஆறுமான உறுப்புக்களையுடைய நால்வகைக் கலிப் பாக்களையும், இருவகை வஞ்சிப்பாக்களையும், யாத்திருந்தனர். யாத்தல் = கட்டுதல்.

வெண்பாவும் கலிப்பாவும் போன்ற செய்யுள் வகைகளை, வேறெம்மொழியிலும் காண்டலரிது.

எடு:

65

வெண்பா

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

தன்னே ரிலாத தமிழ்”