உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

55

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

கலிப்பா

(தரவு)

அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநம காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி;

(தாழிசை)

1

அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாஅய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே;

2

இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீந்த உலவையால் துன்புறூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள் அன்புகொண் மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறக ராலாற்றும் புறவெனவும் உரைத்தனரே;

3

கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால் துன்னரூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்

இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே;

என வாங்கு,

(தனிச் சொல்)

இனைநல முடைய கானம் சென்றோர்

புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயிற்

பல்லியும் பாங்கொத் திசைத்தன

நல்லெழில் உண்கணும் ஆடுமால்இடனே." (கலித். 11)

இது, காட்டு வழியாய்த் தொலைவான இடத்திற்குப் பொருள் தேடச் சென்ற கணவனார், காட்டிலுள்ள ஆண்யானை பெண் யானைக்கும், ஆண் புறா பெண் புறாவிற்கும், ஆண் மான் பெண் மானிற்கும் காட்டும் அன்பை