உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

29

ஏற்கெனவே தனக்குச் சொல்லியிருத் தலால், அவற்றை நேரிற் கண்டபின் நீண்டநாள் வேற்றிடத்தில் தங்கியிராது விரைந்து வருவாரென்றும், அதற்கேற்ற நற்குறிகளும் தோன்றுகின்றனவென்றும், மனைவி தன் தோழிக்குச் சொல்லியது.

இது நாலுறுப்பமைந்த நேரிசை யொத்தாழிசைக் கலி. ஐயுறுப் பமைந்த அம்போதரங்க வொத்தாழிசைக் கலியும், ஆறுறுப் பமைந்த வண்ணக வொத்தாழிசைக் கலியும் இலக்கண நூல்களுட் கண்டு கொள்க. காதலையும் கடவுளையும் வண்ணித்துப் பாடுவதற்கு அவற்றிலும் சிறந்த செய்யுள் வகை எதிர்காலத்திலும் இருக்க முடியாது. அம்போதரங்கம், வண்ணகம் என்னும் இரண்டும் தென் சொற்களே.

அம்போதரங்கம்

அம்முதல் - பொருந்துதல், ஒட்டுதல்.

அம் = (ஒட்டும்) நீர். "அம்தாழ் சடையார்" (வெங்கைக்கோ. 35)

அம் - ஆம் = நீர். “ஆம்இழி அணிமலை” (கலித். 48) அம் - அம்பு = நீர், கடல் "அம்பேழும்' (திருப்பு. 32) ஒ.நோ: கும் கும்பு, செம் - செம்பு. வெம் - வெம்பு.

தரங்கு = 1. ஈட்டி போன்ற குத்துக் கருவி.

2. கரையைக் குத்தும் அலை.

"தரங்காடுந் தடநீர்”

(தேவா. 463,1)

தரங்கு - தரங்கம் = அலை. "நீர்த்தரங்க நெடுங்கங்கை”

(பெரியபு. தடுத்தாட். 165).

தரங்கம்பாடி – அலை யிரையும் ஒரு கடற்கரையூர்.

'ஓ' என்பது ஒரு சாரியை.

அம் என்பது அப் என்று திரிந்தும், அம்பு என்பது திரியாதும், வடமொழிச் சென்று வழங்கும்.

வண்ணம்

வள் - வளை. வளைத்தல் = எழுதுதல், வரைதல்.

"உருவப் பல்பூ ஒருகொடி வளைஇ

99

வள் - வரி. வரிதல் = எழுதுதல், ஓவியம் வரைதல்.

(நெடுநல். 113).