உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

வரித்தல் = எழுதுதல், சித்திரமெழுதுதல்.

வரி = எழுத்து.

வரி + அணம் – வரணம் = எழுத்து, எழுதும் நிறம், நிறம் பற்றிய குலம்.

வரணம் - வர்ண (வ).

வரி என்னும் சொல்லின் பொருள், அதற்கு மூலமான வள் வண்) என்னும் அடியாலும் உணர்த்தப் பெறும்.

வள் - வண் - வண்ணம் = எழுத்து, நிறம், வகை, ஓசைவகை, உ வண்ணம், சிறப்போசைப் பாட்டு.

வண்ணம் - வண்ணகம் - வர்ணக (வ).

வண்ணம் - வண்ண (பிராகிருதம்).

வண்ணிகன் - வர்ணிக (வ) = எழுத்தாளன்.

வண்ணம் என்பது வரணம் என்பதன் திரிபன்று; வள் என்னும் அடிச் சொல்லின் திரிபேயாகும்.

ஒ.நோ: திள் - திண் - திண்ணை = திரண்ட மேடு.

திள் - திரு - திரள் - திரளை - திரணை. திண்ணை, திரணை என்னும் இரண்டும் ஒரே வேரினின்று தோன்றிய ஒரு பொருட் சொற்கள். ஆயின், திண்ணை என்பது திரணை என்பதன் திரிபன்று; திண் என்னும் அடிப்படைச் சொல்லினின்று திரிந்தது. இங்ஙனமே வண்ணமும் வரணமும் என்க. முற்காலத்தில் தொழிற் பெயராயிருந்த பல சொற்கள், பிற்காலத்தில் துணைவினை சேர்ந்தும் சேராதும் வினை முதனிலைகளாக வழங்கு கின்றன. எ.டு: களவு செய், நகை. நிலம் பல படையாய் ஒன்றன்மேலொன்று அமைவதுபோல், சொற்களும் அமைகின்றன. திள், வள் என்னும் ஈரடிகளும் சொல்லாக்கத்தில் ஒத்திருத்தலைப் பின்வருஞ் சொற்களாற் காண்க.

திள் - திண் - திண்ணம் - திண்ணகம்.

- திண் - திண்டு - திண்டி. திண் - திணர்.

"- திட்டு - திட்டம், திட்டை.

வள் - வண் - வண்ணம் - வண்ணகம்.

"வண் - வண்டு - வண்டி. வண் - வணர்.

<<

- வட்டு - வட்டம், வட்டை.