உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

61

(ஆரியன் வருமுன்) கரணம் என்னும் தாலி கட்டுச் சடங்கை, ஊர்த் தலைவன், குடி முதியோன், மங்கல முது பெண்டிர், குலப் பூசாரி முதலியோர் நடத்தி வைத்தனர்.

பண்டையரசரும் பெருஞ் செல்வரும் பெரும்பாலும் சிற்றின்ப வுணர்ச்சி சிறந்து, பல தேவியரையும் காமக்கிழத்தி, இற்பரத்தை, காதற் பரத்தை முதலியோரையும் கொண்டிருந்தமையால். ஓருயிரும் ஈருடலுமான இருதலைக் காம இன்ப வாழ்க்கை, பூதப்பாண்டியனும் அவன் தேவியும் போன்ற ஒரு சில அரசக் குடும்பங்களிடையும், உழவரும் இடையரும் போன்ற பொது மக்களிடையும். புல மக்களிடையும்தான் பெரும்பாலும் இருந்து வந்தது.

66

மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்

தடங்காத் தானை வேந்தர் உடங்கியைந் தென்னொடு பொருதும் என்ப அவரை ஆரமர் அலறத் தாக்கித் தேரொ

டவர்ப்புறங் காணே னாயின் சிறந்த பேரம ருண்கண் இவளினும் பிரிக”

என்று பூதப்பாண்டியன் தன் பகைவரை நோக்கிக் கூறிய வஞ்சினமும் (புறம்.71), அவன் இறந்தபின் உடன்கட்டையேறிய அவன் தேவி பாடிய,

" பல்சான் றீரே பல்சான் றீரே

செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே

........

..........

பெருங்காட்டுய் பண்ணிய கருங்கோட் டீமம்

நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம்

பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற

வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை

நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே."

என்னும் பாட்டும் (புறம்.246), அறிஞர் உள்ளத்தை என்றும் உருக்குந் தன்மைய.

ஒருவனுடைய மனைவி உரிமைப் பெண்ணாயினும் பெருமைப் பெண்ணாயினும் உழுவற் பெண்ணாயினும், மூவகையும் ஊழின் பயனே என்று முன்னோர் கருதினர். "தாரமும் குருவும் தலைவிதி” (ஆசிரியனும் மனைவியும் அமைவது ஊழ்முறை) என்னும் பிற்காலப் பழமொழியும், எங்கே முடிபோட்டு வைத்திருக்கிறதோ அங்கேதான் முடியும் என்று கூறும் வழக்குச் சொல்லும், "Marriages are made in heaven", "Marriage and hanging