உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

go by destiny” என்னும் ஆங்கிலப் பழமொழிகளும் இங்குக் கருதத்தக்கன. வாழ்க்கைத் துணையாகிய மனைவிக்கு ஊழ்த்துணை என்றும் பெயர்.

அம்மான் மகளும் அக்கை மகளும்போல், ம்போல், மணக்கக்கூடிய உறவுமுறைப் பெண் உரிமைப்பெண்; உறவு முறையின்றிச் செல்வக் குடும்பத்தினின்று எடுக்கும் பெண் பெருமைப்பெண்; இரண்டுமன்றி ஒருவன்தானே கண்டவுடன் காதலித்து மணக்கும் பெண் உழுவற் பெண். பல பிறப்பாகத் தொடர்ந்து மனைவியாய் வருபவள் உழுவற் பெண் என்பது, பிறவித் தொடர் நம்பிக்கையாளர் கருத்து. உழுவ லன்பைப் "பயிலியது கெழிஇய நட்பு” என்பர் இறையனார் (குறுந். 2). ஊழால் ஏற்பட்ட ஆவலை உழுவல் என்றனர். இதைத் தெய்வப் புணர்ச்சி யென்றும், இயற்கைப் புணர்ச்சி யென்றும், நூல்கள் கூறும்.

66

இவன்இவள் ஐம்பால் பற்றவும் இவள்இவன்

புன்றலை யோரி வாங்குநள் பரியவும்

காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிரா தேதில் சிறுசெரு வுறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்

துணைமலர்ப் பிணையல் அன்ன இவர்

மணமகிழ் இயற்கை காட்டி யோயே."

என்பது (குறுந்.229), உரிமைப் பெண்ணை ஊழ் இணைத்து வைத்தாகக் கூறியது.

65

செங்கோல் வேந்தன் உழவ னாகி

இராமழை பெய்த ஈர வீரத்துள்

பனைநுகங் கொண்டு யானையேர் பூட்டி

வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும் வேண்டேன் பிறந்தகக் தீண்டிய வாழ்வே செங்கேழ் வரகுப் பசுங்கதிர் கொய்து கன்றுகாத்துக் குன்றில் உணக்கி

ஊடுபதர் போக்கிமுன் உதவினோர்க் குதவிக்

காடுகழி யிந்தனம் பாடுபார்த் தெடுத்துக்

குப்பைக் கீரை யுப்பிலி வெந்ததைச்

சோறது கொண்டு பீற லடைத்தே

இரவல் தாலம் பரிவுடன் வாங்கி

ஒன்றுவிட் டொருநாள் தின்று கிடப்பினும்

நன்றே தோழிநம் கணவன் வாழ்வே."

என்பது, பெருமைப் பெண் தன் கணவனொடு தான் வாழும் இன்ப

வாழ்க்கையை எடுத்துக் கூறியது.