உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

63

வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின் துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல லோன்கயிலைக் கிளைவயின் நீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த விளைவையல் லால்விய வேன்நய வேன்தெய்வம் மிக்கனவே.

39

என்னும் திருக்கோவைச் செய்யுள் (6), உழுவற் பெண்ணைக் கூட்டி வைத்த தெய்வத்தைக் காதலன் பாராட்டியது.

65

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."

என்பது (குறுந்.40), காதலன் தன் உழுவற் பெண்ணை நோக்கிக் கூறியது. மூவகைப் பெண்களுள்ளும் உழுவற் பெண்ணை மணப்பதே குலமத நிலச்சார்பு கடந்ததாகலின், தெய்வத்தால் நேர்ந்ததாக விதந்து கூறப்பெறம்.

காதலன் களவுக் காலத்தில் தன் காதலியை நோக்கி, உலக முழுவதையும் பெற்றாலும் நான் உன்னைக் கைவிடேன் என்று (குறுந்.300) உறுதி கூறிய தற்கு ஏற்ப, கற்புக் காலத்தில், நீ தொட்டது நஞ்சாயிருந்தாலும் எனக்குத் தேவர் அமுதமாகும். (தொல், கற்பியல்,5) என்றும், நீ எனக்கு வேப்பங்காயைத் தந்தாலும் அது தீஞ்சுவைக் கற்கண்டு போல் இனிக்கும் (குறுந். 166)என்றும், உன் கூந்தலைப்போல் நறுமணமுள்ள மலரை நான் உலகில் எங்குங் கண்டதில்லை யென்றும், (குறுந்.2) பலபடப் பாராட்டி அவளை மேன் மேலும் ஊக்கி இன்புறுத்துவது வழக்கம்.

காதல் மனைவியும், தன் கணவனைத் தெய்வம் போற் பேணி, அவன் இட்ட சூளை (ஆணையை) நிறைவேற்றாவிடத்து அதனால் அவனுக்குத் தீங்கு நேராதவாறு தெய்வத்தை வேண்டிக் கொள்வதும், அவன் சூள் தப்பவில்லை யென்பதும் (குறுந்.87), தன் தலைவன் குற்றத்தைப் பிறர் எடுத்துரைப்பின் அதை மறுத்து அவனைப் புகழ்வதும், (குறுந் 3), தன் கணவனும் தானும் ஒருங்கே இறக்க வேண்டுமென்று விரும்புவதும் (குறுந். 57), வழக்கம்.

அரசரும் மறவரும் போர் செய்தற்கும், முனிவரும் புலவரும் தூதுபற்றியும், வணிகர் பொருளீட்டற்கும், வேற்றூரும் வேற்று நாடும் செல்ல நேரின், அவர் திரும்பி வரும்வரை அவர் மனைவியர் ஆற்றியிருப்பதும், சுவரிற் கோடிட்டு நாளெண்ணி வருவதும், அவர் குறித்த காலத்தில் வராவிடின் விரைந்து வருமாறு தெய்வத்தை வேண்டுவதும், இயல்பாம்.