உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

கணவனுக்குக் கற்புடை மனைவியும், பெற்றோருக்கு அறிவுடை

மக்களும், சிறந்த பேறாகக் கருதப்பட்டனர்.

65

என்னொடு பொருதும் என்ப அவரை

ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு

அவர்ப்புறங் காணே னாயின் சிறந்த

பேரமர் உண்கண் இவளினும் பிரிக

"

என்று பூதப்பாண்டியன் வஞ்சினங் கூறுதலும், "சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ" என்று (பதிற். 88), குடக்கோ இளஞ்சேரல் இரும் பொறையும்,

"செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ” என்று (புறம்.3), பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும் பெயர் வழுதியும், பாராட்டப் பெறுதலும் காண்க.

66

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்."

என்றார் திருவள்ளுவர் (குறள். 54).

இனி மக்கட் பேறுபற்றி,

66

படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்

நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை யில்லோர்க்குப்

பயக்குறை யில்லைத்தாம் வாழும் நாளே.'

என்று (புறம்.188) பாண்டியன் அறிவுடை நம்பியும்.

66

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்

றென்னுடைய ரேனும் உடையரோ

-

இன்னடிசில்

புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய் மக்களையீங் கில்லா தவர்."

என்று புகழேந்திப் புலவரும் (நளவெண்பா, கலிதொடர்.68).

66

பொறுமவற்றுள் யாமறிந்த தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற."

என்று திருவள்ளுவரும் (குறள். 61), கூறியிருத்தல் காண்க. பெண் மக்களால் பல தொல்லைகள் நேர்வதால் ஆண் பிள்ளையையே தமிழர்