உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

சிறப்பாக விரும்பினர். “சாண்பிள்ளை ஆண்பிள்ளை மாண்பிள்ளை "பெண்ணைப் பெற்றவன் பேச்சுக் கேட்பான்” என்பன பழமொழிகள்.

65

39

கணவன் தவற்றாலோ மனைவியின் பேதைமையாலோ, சில சமையங்களில் அவரிடைப் பிணக்கு நேர்வதுண்டு. அன்று மனைவி ஊடிக் கணவனொடு பேசாதிருப்பாள். ஊடுதல் சடைவு கொள்ளுதல். அது கணவனால் எளிதாய்த் தீர்க்கப்படும். அது சற்றுக் கடுமையானால் புலவி எனப்படும். அது குழந்தையைக் கணவன் எடுத்துக் கொண்டு போய்க் கொடுப்பதனாலும், வீட்டிற்கு விருந்தினர் வந்திருப்பதாலும், உறவினரும் நண்பரும் தலையிடுவதாலும், தீர்க்கப்படும். புலவி முற்றி விட்டால் துனி எனப்படும். அதை ஒருவராலும் தீர்க்க முடியாது. நீண்ட நாட்சென்று அதுதானே தணியும். பழகப் பழகப் பாலும் புளிப்பது போல், கணவன் மனைவியரிடைப்பட்ட காமவின்பம் சற்றுச் சுவை குறையும்போது அதை நிறைத்தற்குப் புலவியும் வேண்டு மென்றும், அது உணவிற்கு உப்பிடுவது போன்றதென்றும், ஊடல் உப்புக் குறைவதும் துனி உப்பு மிகுவதும் போன்றவை யென்றும், உப்பு மிகையாற் சுவை கெடுவதுபோல் துனியால் இன்பங் கெடுமாதலால் அந்நிலையை அடையாதவாறு புலவியைத் தடுத்து விட வேண்டுமென்றும், திருவள்ளுவர் கூறுவர்.

66

" உப்பமைந் தற்றாற் புலவி அது சிறிது மிக்கற்றால் நீள விடல்."

(குறள்.1302)

பெண்டிர் எத்துணைக் கல்வி கற்றவராயிருப்பினும், உழத் தியரும் டைச்சியரும் மறத்தியரும் குறத்தியரும் பண்டமாற்றுப் பெண்டிரும் கூலியாட்டியரும் வேலைக்காரியரும் வறியவருமாயிருந் தாலொழிய, மணமானபின், மூப்படையுமட்டும், கணவரோடும் பெற்றோரோடும் அண்ணன் அக்கை மாரோடும் மாமியாரோடும் பாட்டன் பாட்டிமாரோடு மன்றி, வீட்டைவிட்டு வெளியே தனியே செல்லப் பெறார்.

கணவனைப் பேணுதலும் சமையல் செய்தலும் பிள்ளை வளர்த்தலும் கணவனில்லாதபோது வீட்டைக் காத்தலுமே, பெண்டிர்க்கு இயற்கையால் அல்லது இறைவனால் வகுக்கப்பட்ட பணியென்பது, பண்டைத் தமிழர் கருத்து. மணமான பெண் வீட்டிலேயேயிருந்து வேலை செய்வதனாலேயே, அவளுக்கு இல்லாள், இல்லக்கிழத்தி, மனைவி, மனையாள், மனையாட்டி, மனைக்கிழத்தி, வீட்டுக்காரி என்னும் இடம்பற்றிய பெயர்களும், இல், மனை, குடி என்னும் இடவாகு பெயர்களும் ஏற்பட்டன.

வீட்டிற்கு அல்லது இல்லத்திற்கு வேண்டிய பொருள்களை யெல்லாம் கணவனே ஈட்டவேண்டுமென்பதும், அதனால் மனைவியும் இள மக்களும் இன்பமாய் வாழவேண்டுமென்பதும், பண்டையோர் கருத்து.