உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

66

வினையே ஆடவர்க் குயிரே வாள்நுதல்

மனையுறை மகளிர்க் காடவர் உயிர்.”

என்னும் குறுந்தொகைச் செய்யுளடிகள் (135:1-2), இதனைப் புலப் படுத்தும்.

இக்காலத்திற் காலைமுதல் மாலை வரை ஆடவர் கடுமையாய் உழைத்தும், குடும்பத்திற்குப் போதிய அளவு பொருள் தேடவோ உணவுப் பொருள் கொள்ளவோ முடியவில்லை. இதனாலேயே, பெண்டிர் வெளியேறி ஆசிரியப் பணியும் அரசியலலுவற் பணியும் ஆற்ற வேண்டியதாகின்றது. ஆகவே, இன்று அவர் கடமை இரு மடங்காய்ப் பெருகியுள்ளது. இந்நிலைமை மக்கட் பெருக்கையும் உணவுத் தட்டையும் காட்டுமேனும், இதற்கு அடிப்படைக் கரணியம் அரசியல் தவறே.

பெண்டிரைத் தனியே வீட்டைவிட்டு வெளிப்போக்காமைக்கு இன்னொரு கரணியமுமுண்டு. அவர் பொதுவாக ஆடவரால், சிறப்பாகக் காமுகரால், நுகர்ச்சிப் பொருளாகக் கருதப்படும் நிலைமை இன்னும் மாறவில்லை. ஆடவரை நோக்க, அவர் மென்மையர், வலுவற்றவர். இதனால் அவர்க்கு மெல்லியல், அசையியல், தளரியல், என்னும் பெயர்கள் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ளன. தீயோரால் அவர்க்கும் அவருறவினர்க்கும் சேதமும் மானக் கேடும் நேரா வண்ணமே, அவர் துணையோடன்றி வெளியே அனுப்பப் படுவ தில்லை. ஆடவர் நான்முழ வேட்டியுடுக்கும் போது, பெண்டிர் பதினெண் முழச் சேலை யணிவதும், இக்கரணியம் பற்றியே.

ஆகவே, பெண்டிரை வெளி விடாதிருப்பது, அவருடைய நலம் பேணலேயன்றி அவரைச் சிறைப்படுத்தலாகாது. கடைகட்கும் கோயிற்கும் திருவிழாவிற்கும் உறவினர் வீட்டு மங்கல அமங்கல நிகழ்ச்சிகட்கும் பிற இடங்கட்கும், துணையொடு போய் வர அவர்க்கு நிரம்ப வாய்ப்புண்டு.

பூப்படைந்த கன்னிப் பெண்களையும் தக்க துணையின்றி வெளியே விடுவதில்லை.

கணவன், பொருளீட்டல் பற்றியோ தீயொழுக்கம் பற்றியோ பிரிந் திருக்கும் போது, கற்புடை மனைவு தன்னை அணி செய்து கொள்வதில்லை; மங்கலவணி தவிர மற்றவற்றை யெல்லாம் கழற்றி விடுவாள்.

'அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய மென்துகில் அல்கல் மேகலை நீங்கக் கொங்கை முன்றிற் குங்குமம் எழுதாள் மங்கல அணியிற் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்