உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப் பவள வாணுதல் திலகம் இழப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப

மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்

கையறு நெஞ்சத்துக் கண்ணகி”

என்று (சிலப்.4:47-57), இளங்கோவடிகள் கூறுதல் காண்க.

67

இனி, அக்காலத்தில், இல்வாழ்க்கைக்குரிய அறங்களையும் செய்வ

தில்லை.

65

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்

துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை.”

என்று (சிலப்.16:71-73), கண்ணகி மதுரையில் தன் கணவனை நோக்கிக் கூறுதல் காண்க.

மறுமுகம் பாராத கற்பென்பது கணவன் மனைவியிருவருக்கும் பொதுவேனும், பூதப்பாண்டியன் போன்ற ஒரு சிலரே அவ்வறத்தைக் கடைப்பிடித்த ஆடவராவர்; பெண்டிரோ பற்பல்லாயிரவர். காதலிலும் ஆடவர் பெண்டிர்க்கு ஈடாகார். உடன்கட்டையேறுதலும் உடனுயிர் விடுதலுமே இதற்குப் போதிய சான்றாகும். மறுமணஞ் செய்யாத கைம்மை நிலையும் பெண்டிர் சிறப்பைக் காட்டும்.

புலவர், அரசர், வணிகர். வெள்ளாளர் ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த பெண்டிர், கணவன் இறந்த பின், எட்டாம் நாள் இறதிச் சடங்கில் மங்கல வணியும் பிறவணிகளும் நீக்கப்பெறுவர். அது 'தாலியறுப்பு' எனப்படும். அதன் பின் வெள்ளாடையணிந்து வேறெவரையும் மணவாமல் தம் எஞ்சிய காலத்தைக் கழிப்பர். அவர் உயர்குடிப் பிறந்தவர் எனப்படுவர்.

வீட்டைவிட்டு வெளியேறி உழவும் கைத்தொழிலும் அங்காடி விற்பனையும் கூலி வேலையும் தெருப்பண்டமாற்றும் செய்யும் பிற வகுப்புப் பெண்டிரெல்லாம், கணவன் இறந்தபின் தாலியறுப்பினும் மறுமணம் செய்து கொள்வர். அது 'அறுத்துக் கட்டுதல்' எனப்படும் இனி, சில வகுப்புப் பெண்டிர், கணவன் உயிரோடிருக்கும் போதே தீர்வை என்னும் கட்டணத்தைக் கொடுத்துத் தீர்த்து விட்டு வேறொருவனை மணந்து கொள்வதும் உண்டு. அது "தீர்த்துக் கட்டுதல்” எனப்படும். அது எத்தனை முறையும் நிகழும்.

அரசர் போர்க்களத்தில் தோற்றுத் தற்கொலை செய்து கொண்டாலும், பகைவராற் கொல்லப்பட்டாலும், அவர் தேவியரும் மகளிரும் பகையர சர்க்கு அடிமையாகாதவாறு தீக்குளித்து இறப்பது முண்டு.