உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

கணவன் உயிரோடிருக்கும் வரை அவனுக்கு உண்மையான மனைவி யாயிருந்து, அவன் இறந்தபின் வேறொருவனை மணப்பதும், கணவன் இறந்தபின் மறுமணம் செய்யாதிருப்பதும், கற்பின் பாற்படு மேனும், அவற்றைத் தமிழகம் கற்பெனக் கொள்ளவில்லை. தமிழகக் கற்பு உலகத்திலேயே தலைசிறந்ததாகும். அது பண்பாட்டுப் பகுதியிற் கூறப்படும். இங்குக் கூறியவையெல்லாம் நாகரிகக் கூறுகளே.

குடும்பத் தலைவன் இறந்தபின், ஈமக்கடனும் இறுதிச் சடங்கும் அவன் புதல்வரால், புதல்வன் இல்லாவிட்டால் அவன் உடமைக்கு உரிமை பூணும் உறவினனால், நடத்தப்பெறும். ஈமம் என்பது சுடலை.

பிணத்தைப் புதைப்பதே தமிழர் வழக்கம். எரிப்பது ஆரிய வழக்கமே. ஆரியர்குலப் பிரிவினையால் பிராமணர்க்கு ஒப்புயர்வற்ற தலைமை எற்பட்ட பின் தமிழரும் அவர் பழக்க வழக்கங்களைப் பின்பற்றலாயினர். மக்கட் பெருக்கமும் நிலத்தட்டும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில், எரிப்பது பொருளாட்சி நூற்படி சிறந்ததாகத் தோன்றும்.

பெண் மக்கள், திருமணத்தின் போது அணிகலமும் வெண்கல பித்தளை செப்பேனங்களும் பெறுவதனாலும், பிற்காலத்திற் பெற்றோரை ஆண் மக்கள்போல் உணவளித்துக் காக்கும் உரிமையின்மையாலும், பெற்றோர் உடமைக்கு உரிமையுள்ளவராகார்.

துறவறம்

பட்டினத்துப் பிள்ளையார் போல் உலக வாழ்க்கையின் நிலையா மையை உணர்ந்தோ, தாயுமானவர் போல் குருவினால் அறி வுணர்த்தப் பெற்றோ, சிவப்பிரகாசர் போல் இயல்பாகவே இல்லறத்தில் வெறுப்புக்கொண்டோ, இராமலிங்க அடிகள் போல் இளமையிலேயே கடந்த அறிவடைந்தோ, இளங்கோவடிகள் போல் உடன் பிறந்தார்க்குக் கேடுவராது தடுத்தற் பொருட்டோ, கோவல கண்ணகியர் தந்தையரும் மாதவி மணிமேகலையரும் போல் கண்ணன்ன உறவினர் நெடும் பிரிவைத் தாங்க முடியாமலோ, துறவு பூணுவது தொன்றுதொட்ட வழக்கமாகும்.

குடும்பச் சண்டையாற் சடைவு கொண்டும் குடும்பப் பொறுப்பை நீக்கிக் கொள்ளவும், துறவு பூணுவதுமுண்டு. இவற்றுள் முன்னது சிறப்புடையதன்று; பின்னது பெருங்குற்றமாகும்.

ஆண்டி, பண்டாரம், அடிகள், முனிவன், சித்தன் எனத் துறவியர் பலவகையர். ஆண்டி இரப்போன்; பண்டாரம் அறிவு நூல்களை நிரம்பக்கற்ற பண்டிதன்; அடிகள் உள்ளத் தூய்மையும் ஆவிக்குரிய (spiritual) செய்திகளிற் பட்டறிவும் வாய்ந்தவர், பட்டினத்தாரும் தாயுமானவரும் இராமலிங்கரும்