உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

2.தலைவன்.

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

"அறவோன் மகனே மறவோர் செம்மால்!"

(புறம்.366).

ஐ - ஐயன் = பெரியோன், தந்தை, அண்ணன், தலைவன், அரசன், ஆசிரியன், முனிவன், அடிகள், இறையடியான், தெய்வம், கடவுள்.

உறவினரல்லாத மூத்தோரையும் உயர்ந்தோரையும் ஐயா என்று விளிப்பதே தொன்று தொட்ட தமிழ் மரபு. இது ஆரியர் இந்தியாவிற்கு வரு முன்னும் ஆரிய இனமே உலகத்தில் தோன்று முன்னும், பழம் பாண்டி நாடும் தமிழன் பிறந்தகமுமான குமரிக் கண்டத்தில் தோன்றிய வழக்காகும். ஐயா என்பது ஐயன் என்பதன் விளிவேற்றுமை.

காதலும் மதிப்பும் பற்றி, உறவினரும் அல்லாருமான, ளை யோரையும் ஐயா என்று விளிப்பது மரபு வழுவமைதியாம்.

எ-டு: ஐயா, ஏஐயா - ஏயா, ஏ ஐயோ -ஏயோ, ஓ ஐயா ஓயா, வாஐயா – வாயா. ஓயா என்பது பெரும்பாலும் இகழ்ச்சியும் சினமும் பற்றிவரும்.

மகனை, ‘என் அப்பன் வந்தான்' என்பது போல் 'என் ஐயன் வந்தான்' என்று முதல் வேற்றுமையிலும், ஐயன் என்னும் சொல் வழுவமைதியாக வரும்.

மரபு

தாழ்த்தப் பட்டவர் முதல் தலையாயார் வரை, தமிழரெல்லாரும். பெரும்பாலும் தந்தையை ஐயா என்றே தொன்று தொட்டு விளித்து வருகின்றனர்.

இரங்கல், நோதல், வியத்தல் முதலிய குறிப்புப் பற்றிய இடைச் சொல்லாக, ஐயன் என்னும் தந்தை முறைப் பெயரே பல்வேறு விளிவடிவில் தனித்தும் இரட்டியும் வழங்கி வருகின்றது.

எ-டு: ஐய, ஐயா, ஐயே, ஐயோ, ஐயவோ - ஐயகோ; ஐயைய, ஐயையோ.

"தந்தைக்குப் பின் தமையன்” என்னும் நெறி முறைப்படி ஐயன் என்பது அண்ணனையுங் குறிக்கும். எமையன் நுமையன் தமையன் என்று, எம் நும் தம் என்னும் மூவிடம் குறித்த முன்னொட்டுப் பெற்றுவழங்கிய அண்ணன் முறைப் பெயர்களுள், இறுதியது மட்டும் இன்று முன்னொட்டுப் பொருளிழந்து வழங்குகின்றது. தமையன் = தம் அண்ணன், அண்ணன்.

எக்குலத்தாராயினும், ஆசிரியரை ஐயர் என்பது மேலை வடார்க் காட்டு மாவட்டத்தார் வழக்கு.

ஆக்க வழிப்பாற்றல் பற்றி, மக்கள் வகுப்பாருள் சிறந்தாராகக் கருதப் பெறும் முனிவரை, விதந்து ஐயர் என்றல் தமிழ் மரபு. பிங்கலவுரிச்