உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

ஐயன் என்னும் சொல், மாகதி என்னும் பிராகிருதச் சிதைவான பாலிமொழியில் அய்ய என்று திரியும்.

ஐ என்னும் தந்தை முறைப் பெயரினின்றே ஆய் என்னும் தாய் முறைப் பெயர் திரியும்.

ஐ - ஆய் = அன்னை.

எம் + ஆய் = யாய் (எம் அன்னை)

உம் + ஆய் = மோய் -மொய் (உம் அன்னை)

நம் + ஆய் = (நாய்) - ஞாய் (நம் அன்னை)

தம் + ஆய் - தாய் (தம் அன்னை, அன்னை)

அன்னையைக் குறித்த அவ்வை என்னும் சொற் போன்றே, ஆய் என்னும் சொல்லும் பாட்டியைக் குறிக்கும். இது ஆயாள் என்றும் வழங்கும்.

அம்மை - அவ்வை = அன்னை, பாட்டி.

அப்பாய் (அப்பனைப் பெற்ற பாட்டி), அம்மாய் (அம்மையைப் பெற்ற பாட்டி) என்னும் முறைப்பெயர்களில், ஆய் என்பது அன்னையைக் குறித்தல்

காண்க.

அன்னையைக் குறிக்கும் மாயி, மா என்னும் இந்திச் சொற்கள், மோய் என்னும் தென் சொல்லின் திரிபே. மோய் - மாய் - மாயி, மா. வடநாட்டுப் பழந் திரவிடமாகிய திரிமொழியே பிராகிருதமென்றும், சூரசேனிப் பிராகிருத வழிவந்த சிதைமொழியே இந்தியென்றும், அறிக.

நாய் என்னும் வடிவம் ஒரு விலங்கையும் குறித்தலால், அம் மயக்கை நீக்குதற்கு ஞாய் எனத் திரிந்தது. தலைவி ‘எம் ஆய்' என்னும் பொருளில் யாய் என்றும், தோழி 'நம் ஆய்' என்னும் பொருளில் ஞாய் என்றும், நற்றாயைக் குறித்தலை 7-ஆம் முல்லைக்கலியுட் காண்க.

"யாயும் ஞாயும் யாராகியரோ” என்னும் குறுந்தொகையடியில் (40:1) வரும் “ஞாயும்” என்னும் சொல், “மோயும்” என்றிருந்திருத்தல் வேண்டும். இத்தகைய மரபு வழுக்கள் கடைக்கழகக் காலத்திலேயே தோன்றி விட்டன.

தாய் என்னும் பெயர் தன் முன்னொட்டுப் பொருளிழந்து வழங்குவது, தமப்பன், தமையன், தமக்கை, தவ்வை, தங்கை முதலிய சொல்வழக்குப் போன்றது. தமப்பன் - தகப்பன். தம் அவ்வை - தவ்வை. அப்பன் பெயர் அண்ணனையும் குறித்தது போல், அம்மை பெயர் அக்கையையும் குறித்தது.