உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

73

ஐயன் என்பதன் பெண்பால் 'ஐயை'. ஐயை = தலைவி, ஆசிரியை, சிரியன் மனைவி, துறவினி, காளி, சிவை (மலைமகள்). காளியை அம்மையென்றும், அவ்வை (கொற்றவை) யென்றும், கூறுதலை நோக்குக.

தாய், அரசி முதலிய பிற பொருள்களைக் காட்டும் இலக்கியம் இறந்துபட்டது.

பிராமணர் தென்னாட்டிற்கு (தமிழகத்திற்கு) வந்த பின், அவருள் இல்லறத்தார் பார்ப்பாரென்றும், துறவியர் போன்றவர் ஐயர் அல்லது அந்தணர் என்றும், அழைக்கப்பெற்றனர். நாளடைவில் எல்லாப் பிராமணரும் அந்தணர் என்பதைக் குலப் பெயராகவும், ஐயர் என்பதைப் பட்டப் பெயராகவும், கொண்டு விட்டனர். ‘ஐயர் அவர்கள்' என்று பொருள்படும் 'ஐயரவர்' என்பது, தெலுங்கில் ஐயவாரு என்றும் ஐயகாரு என்றும் திரிந்தது. ஐயகாரு ஐயங்கார்.

-

பிராமணரைப் பின்பற்றி, வீர சைவரும் சௌராட்டிரர் என்னும்

பட்டுநூற்காரரும் ஐயர் என்பதைக் மேற்கொண்டுள்ளனர்.

குலப்பட்டப்

பெயராக

சமயக் குரவர் என்னும் பொருளில், கிறித்தவக் குருமாரும் ஐயர் என அழைக்கப்பெற்றனர்.

இங்ஙனம் ஐயன், ஐயை என்னும் சொற்கள், குமரி நாட்டுக் காலத் தினின்றே ஐம்பதினாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கும் தூய தென்சொல்லாயிருப்பவும், அவற்றை முறையே ஆர்ய, ஆர்யா என்னும் (ஆரிய இனத்தைக் குறிக்கும்) இருபாற் பெயரினின்று தோன்றியிருப்பதாகச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலியிற் குறித்திருப்பது, பிராமணரின் குறும்புத் தனத்தையும், தலைமைப் பதவி தாங்கும் தமிழ்ப் பேராசிரியரின் அறியாமையையும் அடிமைத் தனத்தையும், எத்துணைத் தெளிவாகக் காட்டுகின்றது!

முனிவரான ஐயர் அந்தணர் என்றும் பெயர் பெறுவர்; பெரும்பாலும் ஆடையின்றியிருப்பர்.

அந்தணர் என்பது, எல்லாவுயிர்களிடத்தும் அழகிய குளிர்ந்த அருளையுடையவராய் முற்றத் துறந்த முனிவரைக் குறிக்கும் சொல்; ஒரு குலத்திற்கோ ஓர் ஆரிய வகுப்பிற்கோ உரிய பெயரன்று.

65

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்."

(குறள்.30)

என்று திருவள்ளுவர் 'நீத்தார் பெருமை' என்னும் அதிகாரத்திற்

கூறுதல் காண்க. நீத்தார் - துறந்தோர்.