உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

'இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்”

99

(கலித்.38)

என்பது சிவனைக் குறித்தது.

66

நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங் காலை அந்தணர்க் குரிய"

(71)

என்று தொல்காப்பிய மரபியலிற் கூறியிருப்பது, தமிழ் மரபிற்கு முற்றும் மாறாகும். இது ஆரியர் தமிழ் நாட்டிற்கு வந்தபின் ஏற்பட்ட கருத்தே.

66

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க

லுற்றார்க் குடம்பும் மிகை.”

என்னும் குறளை (345) நோக்கி உண்மை தெளிக. முனிவரிடம் உடம்பன்றி வேறொன்றுமிராது.

பண்டாரம் என்னும் சொல்லும் தென் சொல்லே.

பண்டாரம் களஞ்சியம். பல நூல்களைக் கற்ற பண்டிதன் ஓர்அறிவுக் களஞ்சியம் போலிருப்பதால், உவமையாகு பெயராய்ப் பண்டாரம் எனப்பட்டான்.

"திருக்காளத்தி ஞானக் களஞ்சியமே" என்று இராமலிங்க அடிகள் இறைவனை விளித்தலையும் (அருட்பா, 1. விண்ணப்ப. 255), ஆங்கிலத்திலும் ஒரு பேரறிஞனை 'repository of curious information' என்று கூறும் வழக்கையும், கூர்ந்து நோக்குக. வண்ணம் பாடுவதிற் சிறந்த பாவலனை வண்ணக் களஞ்சியம் என்று கூறுதலும் காண்க.

பண்டம் பொருள். பண்டம்+ஆரம் = பண்டாரம். ஒ. நோ: வட்டம்+ஆரம் = வட்டாரம். ஆரம் என்பது ஓர் இடப் பொருளீறு.

வடமொழியார், இயற்பொருளில் வரும்போது பண்டாரம் என்னும் சொல்லைப் பாண்டார (bhandara) என்றும், ஆகுபெயர்ப்பொருளில் வரும்போது அச்சொல்லைப் பிண்டார என்றும், வேறுபடுத்தியும் வேர்ப் பொருளின்றியும் காட்டுவர்.

சித்தர் மலையிலிருப்பவராயினும், எங்கும் இயங்குபவர். அவர் அறிவர் என்றும் சொல்லப்படுவர். சித்து அறிவு.

" மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்."

என்று தொல்காப்பியம் (புறம். 20) கூறுவது சித்தரைப் பற்றியே.

செத்தல் = கருதுதல், கருதியறிதல், அறிதல்.

செத்து = கருதி (இ. கா. வி. எ.).