உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

66

'அரவுநீ ருணல் செத்து" (கலித். 45).

செ - செத்து (தொழிற்பெயர்) = கருத்து, அறிவு.

ஒ. நோ : ஒ - ஒத்து =

1. இ. கா. வி. எ.

75

2. தொழிற்பெயர்.

செத்து - சித்து. ஒ. நோ : செந்துரம் - சிந்துரம். சித்து என்னும் தென் சொல்லும் சித்தி (siddhi) என்னும் வடசொல்லும் வெவ்வேறாம். சித்து அறிவு; சித்தி கைகூடுதல். சித்தன் ஆற்றல் சித்து எனப்படும். அதைச் சித்தி என்பது தவறு. 'சித்து விளையாடுதல்' என்னும் உலக வழக்கை நோக்குக. தமிழ் இலக்கண மருத்துவ முதனூல்களை இயற்றியவர் முனிவரும் சித்தருமே.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதனூ லாகும்."

(தொல். மரபியல், 95).

தமிழ் மருத்துவம் சித்த மருத்துவம் எனப்படும். பொன்னாக்கமும் (இரசவாதமும்) சித்தர் கலையே.

கிறித்துவிற்குப் பிற்பட்ட சித்தருள் பதினெண்மர் பெயர் பெற்றவர். அவர் அறிவுப் பாடல்களைப் பதினெண் சித்தர் ஞானக் கோவையிற் காணலாம்.

சித்தரும் முனிவரும் ஒரோவொரு சமையம் நாட்டிற்கும் வந்து செல்வதாகச் சொல்லப்படுவர்.

ஆசை, செருக்கு, அறிவு மயக்கம் என்னும் மூன்றும் அடியோடு நீங்கப்பெறுவதே, துறவறத்தின் பழுத்த நிலையாம்.

"காம வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய்."

என்றார் திருவள்ளுவர் (குறள். 360).

துவராடை யணிந்த பின்பும் தன்னைப் பிறப்பில் உயர்ந்தவனாகக் கருதும் ஆரியனுக்கு, இம் மூன்றும், சிறப்பாக நான் என்னும் செருக்கு, நீங்கப் பெறுவது, முடவன் மரமேறிக் கொம்புத் தேனைக் குடிப்பதே யாம்.

தமிழர் இல்லறத்தில் வெற்றி கண்டது போன்றே துறவறத்திலும், அருளுடைமை, புலான் மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை, அவாவறுத்தல் என்னும் அறுவகை யறங்களையும்; நோன்பு (தவம்), மெய்யுணர்தல் (ஓகம்) என்னும் இருவகை வழிகளையும், கடைப்பிடித்து வெற்றி கண்டனர்.