உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

தமிழத் துறவியருள் தலைசிறந்தவர் சித்தர். அவர் வான்வழி இயங்குதல், கூடுவிட்டுக் கூடு பாய்தல், தோன்றி மறைதல், மண்ணுள் இருத்தல், உண்ணாது வாழ்தல் முதலிய பல ஆற்றல்களை அடைந்தவர். திருமூலர் ஒரு சித்தர். பட்டினத்தாரும் இராமலிங்க அடிகளும், இறுதியில் சித்தநிலை அடைந்ததாக அவர் வரலாறு கூறும்.

நோன்பு (தவம்) என்பது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொதுவாம்.

9. சமயவொழுக்கம்

சமயம் என்பது மதம். அது ஒருவகைச் சமைவைக் குறித்தலால் சமயம் எனப்பட்டது. சமைதல் நுகர்ச்சிக்குப் பதமாதல். அரிசி சோறாகச் சமைவது உண்பதற்குப் பதமாதல். பெண்பிள்ளை மங்கையாக சமைவது மண நுகர்ச்சிக்குப் பதமாதல். ஆதன் (ஆன்மா) இறையடிமையாகச் சமைவது, வீடுபேற்றிற்கு அல்லது இறைவன் திருவடிகளையடைவற்குப் பதமாதல்.

சமையம் என்பது வேளையைக் குறிக்கும் போதும், ஒரு வினைக்குப் பதமான அல்லது தக்க காலநிலை என்னும் பொருளதே. நல்ல சமையம், தக்க சமையம், ஏற்ற சமையம் என்னும் வழக்குக்களை நோக்குக. பலவகைச் சமைவுகளுள்ளும் ஆதன் இறையடிமையாகச் சமைவது தலைசிறந்த தாதலால், சமைவு என்னும் வினை, அதனையே சிறப்பாகக் குறிக்கும். ஆயினும், பொருள் மயக்கமில்லாவாறு, சோறு சமைவது சமையல் என்றும், பெண் சமைவது சமைதல் என்றும், நேரம் சமைவது சமையம் என்னும், ஆதன் சமைவது சமயம் என்றும், வேறுபடுத்திச் சொல்லப் பெறும்.

சமையம் என்னும் சொல் அமையம் என்னும் சொல்லின் முதன்மிகை (prothesis). அமைதல் பொருந்துதல் அல்லது தகுதியாதல். நல்லதொன்று வாய்ப்பின், அமைந்து விட்டது என்பர். அமையும் நேரம் அமையம்.

உயிர் முதற்சொற்கள் சொன்முதல் மெய்களுள் ஒன்றும் பலவும் பெற்றுச் சொற்களைப் பிறப்பித்தல், சொல்லாக்க நெறிமுறைமையாம். எ-டு: உருள் - சுருள், ஏண் - சேண்.

அமை என்னும் முதனிலையும் அம் என்னும் வேரினின்று திரிந்த தாகும். இதனால், சமயம் என்னும் சொல் தூய தென் சொல்லாதல் தெளிக. அது வட சொல்லென்று வடமொழிச் சொற் களஞ்சியங்களிலும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலியிலும் குறித்திருப்பது கொண்டு மயங்கற்க.

ஆரியர்

வருமுன்பே, தமிழர் சமயத் துறையிலும் தலை சிறந்திருந்தனர். ஆயினும், எல்லாரும் அந்நிலையடையவில்லை. எந்த