உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

நாகரிக நாட்டிலும், தலையாயார்,

முத்திறத்தார் இருக்கவே செய்வர்.

77

டையாயார், கடையாயார் என்னும்

ஆகவே, தமிழர் மதமும், சிறு தெய்வ வணக்கம், பெருந் தெய்வ வழிபாடு, கடவுள் நெறி என முந்நிலைப் பட்டிருந்தது.

சிறு தெய்வங்கள்

(1)

தென்புலத்தார் (இறந்த முன்னோர்).

(2) நடுகல் தெய்வங்கள்.

(3) பேய்கள் (பேய், பூதம், முனி, சடைமுனி, அணங்கு (மோகினி), சூரரமகளிர் முதலியன).

(4) தீய வுயிரிகள் (பாம்பு, சுறா,முதலை முதலியன).

(5) இடத் தெய்வங்கள் (ஆற்றுத் தெய்வம், மலைத் தெய்வம், காட்டுத் தெய்வம், நகர்த் தெய்வம், நாட்டுத் தெய்வம்).

(6) இயற்கைப் பூதங்கள் (காற்றும் தீயும்).

(7)

வானச் சுடர்கள் (கதிரவனும் திங்களும்).

(8) செல்வத் தெய்வம் (திருமகள்).

(9) கல்வித் தெய்வம் (நாமகள் அல்லது சொன்மகள்).

(10) பால்வரை தெய்வம் (ஊழ் வகுப்பது).

பெருந் தெய்வங்கள்

இவை ஐந்திணைத் தெய்வங்களாகும்.

குறிஞ்சி

சேயோன்.

மாயோன்.

பாலை

காளி.

முல்லை

மருதம்

நெய்தல்

வேந்தன்.

வாரணன்.

சேயோன் சிவந்தவன். சேந்தன் என்னும் பெயரும் அப்பொருளதே. முருகன், வேலன், குமரன் என்னும் பெயர்களும் இவனுக்குண்டு. சிவன் என்பது சேயோன் என்பதன் உலக வழக்கு வடிவம். இப்பெயர் வடிவு வேறுபாட்டைக் கொண்டு, பிற்காலத்தில் ஆரியர் ஒரே தெய்வத்தை இரண்டாக்கித் தந்தையும் மகனுமாகக் கூறி விட்டனர். குமரன் என்பதற்கும்