உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

சேய் என்னும் குறுக்கத்திற்கும் மகன் என்று தவறாகப் பொருள் கொண்டதே இதற்கு அடிப்படை.

சிவன் என்று ஆரியத் தெய்வம் ஒன்றுமில்லை. சிவ என்னும் சொல், நல்ல அல்லது மங்கல என்னும் பொருளில், உருத்திரனுக்கும் இந்திரனுக்கும் அக்கினிக்கும் பொதுவான அடைமொழியாகவே ஆரிய வேதத்தில் வழங்கிற்று.

புறக்கண் காண முடியாதவற்றையும் நெடுந்தொலைவிலுள்ள வற்றையும் கண்டறியும் ஓர் அறிவுக் கண் போன்ற உறுப்பு, குமரி நாட்டு மக்கள்

நெற்றியிலிருந்ததென்றும்,

அதனாலேயே அவர்தம் இறைவனுக்கும் (சிவனுக்கும்) ஒரு நெற்றிக் கண்ணைப் படைத்துக் கூறினரென்றும், ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வெள்ளிமலை (கைலை) யிருக்கையும் காளையூர்தியும் சிவனைக் குறிஞ்சி நிலத் தெய்வமாகக் காட்டுவது கவனிக்கத்தக்கது.

வரகுண பாண்டியனின் தலைமையமைச்சரும் பிராமணரும் சிறந்த சிவனடியாரும் வடமொழி தென்மொழி வல்லுநருமாகிய மாணிக்கவாசகர்,

"பாண்டி நாடே பழம்பதி யாகவும்”

"தென்னா டுடைய சிவனே போற்றி"

(திருவாகசம், 2:118)

(திருவாசகம் 4 : 164)

என்று பாண்டி நாட்டையே சிவநெறிப் பிறப்பிடமாகக் குறித்தல் காண்க. இனி, சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல் களையும் மதுரையில் அருளிச் செய்ததையும், முத்தொழில் அல்லது ஐந்தொழில் திருநடத்தைத் தில்லையில் ஆற்றுவதையும், எண்மறச் செயல்கள் செய்த இடங்கள் (அட்டவீரட்டம்) தமிழ் நாட்டிலிருப் பதையும், ஊன்றி நோக்குக.

மாயோன் கரியவன், மா கருப்பு. மாய கிருஷ்ணன் என்னும் பெயர்க்கும் இதற்கும் யாதொரு தொடர்புமில்லை. கண்ணபிரான் பிறக்கு முன்பே, கிருஷ்ண என்னும் சொல் கருப்பு என்னும் பொருளின் இருக்கும் வேதத்தில் வழங்கிற்று. கிருஷ்ண பக்ஷ (கரும்பக்கம்) கிருஷ்ண ஸர்ப்ப (கரும்பாம்பு) என்னும் பெயர்களை நோக்குக. கிருஷ்ண என்னும் சொற்கு வேத மொழியில் வேரில்லை; தமிழிலேயே உள்ளது.

கள் - கரு - கருள் = 1. கருமை. கருள்=1.

"கருள் தரு கண்டத்து...... கைலையார்'

"

2.இருள் (பிங்.).

(தேவா. 337,4)

3.குற்றம்.