உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

'கருள் தீர்வலியால்"

கருள்

=

திரியும்.

79

(சேதுபு. முத்தீர்த். 5).

க்ருஷ். ளகர மெய்யீறு வேதமொழியில் ஷகர மெய்யீறாகத்

எ-டு : சுள் - சுஷ் (to dry) உள் - உஷ், (to burn).

மாயோன், மால், விண்டு என்னும் பெயர்கள் ஒரு பொருட்சொற் கள்.

மால் = கருமை, முகில், திருமால்.

விண்டு = முகில், வானம், திருமால்.

விண் = வானம், முகில், மேலுலகம்.

விண் - விண்டு.

ஆரிய வேதத்தில் விஷ்ணு என்னும் பெயர் கதிரவனைக் குறித்தது. காலை எழுச்சியையும் நண்பகற் செலவையும் எற்பாட்டு (சாயுங்கால) வீழ்ச்சியையுமே மூவடியால் (மூன்று எட்டால்) உலக முழுவதையும் விஷ்ணு (கதிரவன்) அளப்பதாக முதலிற் கொண்டனர் வேத ஆரியர்.

குறிஞ்சி நிலத்தார் தம் தெய்வத்தை மலையில் தோன்றும் நெருப் பின் கூறாகவும், முல்லை நிலத்தார் தம் தெய்வத்தை வானத்தினின்று பொழியும் முகிலின் கூறாகவும், கொண்டனர். இதனாலேயே, சிவனுக்குத் தீவண்ணன், அந்திவண்ணன், மாணிக்கக் கூத்தன் என்னும் பெயர்களும்; திருமாலுக்குக் கார்வண்ணன், மணிவண்ணன் என்னும் பெயர்களும்; தோன்றின.

காளி கருப்பி. கள் - கள்வன் = கரியவன். கள் - காள் - காழ் = கருமை. காள் காளம் = கருமை. காள் - காளி. கா கூளிகட்குத் தலைவி. கூளி பேய். பேய் கருப்பென்றும் இருள் என்றும் பெயர் பெறும், கருப்பி, கருப்பாய் என்னும் காளியின் பெயர்களை, இன்றும் பெண்டிர்க்கிடுவது பெருவழக்கு. தாய் என்னும் பொருளில் அம்மை (அம்மன்) ஐயை என்றும், இளைஞை என்னும் பொருளில் கன்னி, குமரி என்றும், வெற்றி தருபவள் என்னும் பொருளில் கொற்றவை (கொற்றவ்வை) என்றும், காளிக்குப் பெயர்கள் வழங்கும். அங்காளம்மை என்பது அழகிய காளியம்மை என்னும் பொருளது.

ஆரியர் வருமுன் வட இந்தியா முழுதும் திரவிடர் பரவியிருந் ததினால், வங்க நாட்டில் காளிக் கோட்டம் ஏற்பட்டது.

வேந்தன் = அரசன். முதற்காலத்தில் அரசனும் தெய்வமாக வணங்கப்பட்டான். அதனால், இறைவன் என்னும் பெயர் அரசனுக்கும் கடவுட்கும், கோயில் என்னும் பெயர் அரண்மனைக்கும் தெய்வக் கோட்டத்திற்கும், பொதுவாயின. வேந்தன் இறந்தபின் வானவர்க்கும்