உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

பழந்தமிழாட்சி

நரபலி, மற்போர், கொடும்பாவி கட்டியிழுத்தல் ஆகிய மூவிடத்தும் நிகழுங் கொலைக்குத் தண்டனையேயில்லை. தற்கொலையைத் தடுப்பதற்குச் சட்டமுறையான தடையும் அக்காலத் தில்லை.

அரசியற்கு மாறான குற்றங்களுள், இறையிறுக்காமைக்குச் சொத்துப் பறிமுதலும், உறுபொருள் கவர்தலுக்குச் சிறையும், பிறவற்றிற்குக் கொலையும் 2 பொதுவாக விதிக்கப்படும் தண்டனை யாகும். இறையிறாதார்க்கு ஈராண்டுத் தவணையும், அதன்மேற் குறிப்பிட்ட காலத்திற்குப் பிணைப்பேறும் தரப்பட்டன. அதன் பின்னும் இறாதான் சொத்து பறிமுதலாகிக் கோயிற்கு விற்கப்பட்டு, அரசிறைத் தொகைபோக எஞ்சியதெல்லாம் கோயிலொடு சேர்க்கப்பட்டது. செய்தவர்

கொள்ளையடித்தவர்

பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கலகஞ்

தெய்வத்திற்கு மாறான குற்றங்கட்குத் தண்டமும், குற்றவாளி கோயில் வினைஞனாயின் சிறுபான்மை வேலை நீக்கமும் தண்டனையாயிருந்தன. கோயில் வினைஞருள், கீழோர் குற்றத்தை மேலோரும்; மேலோர் குற்றத்தை ஊரவையார், நாட்டதிகாரி, அரச னால் விதந்து விடுக்கப்பட்ட அதிகாரி, அரசன் ஆகியவருள் ஒருவர் அல்லது பலரும் கேட்டுத் தீர்ப்பது வழக்கம். ஒப்பிப் பணி செய்யாதவர்க்குக் கடுந்தண்டவரியும் கோயிற்பொருள் கவர்ந்த பூசகன் அறைகாரன் (உக்கிராணத்தான்) முதலியோர்க்குத் தண்டமும் விதிக்கப்பட்டன. அணிகலமும் தட்டுமுட்டுங் களவாடியவரால் இறுக்கப்பட்ட தண்டத் தொகையைக் கொண்டு, அப் பொருள்கள் வாங்கி வைக்கப்பட்டன. தண்டமிறுக்க இயலாத பூசகர் தம் கோயின் முறைநாள்களில் சில பல விட்டுக் கொடுத்தனர்.

பெரும்பாலும் குற்றங்கண்டே தண்டனை விதிக்கப்பட்டது. ஐயுறவானவிடத்தில் மக்களை வதைத்துக் கேட்பதும் உண்டென் பது, பழியஞ்சிய திருவிளையாடலால் அறியக் கிடக்கின்றது. அக்காலத்தில் நடுவுநிலையாக முறை வழங்கப்பட்டதென்பது, மனுமுறைச் சோழன் பொற்கைப் பாண்டியன் நெடுமுடிக்கிள்ளி முதலியோர் செய்தியால் அறியலாம். ஆயினும், சிலவிடத்து ஆராயா மல் தண்டனை விதிக்கப் பட்டதென்பது, வார்த்திகன், கோவலன்,

1. சேந்தனார் பட்டினத்தாரின் செல்வத்தைக் காட்டவில்லை யென்று சோழனால் சிறை செய்யப்பட்டார்.

2. அரசவின்பப் பொருளான ஒரு மாங்கனியை யுண்டதற்காக ஒரு பார்ப்பனச் சிறுமி நன்னனாற் கொல்லப்பட்டாள்.