உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

பழந்தமிழாட்சி தேசங்களுடனும், மேற்கில் அரபியா பாபிலோனியா கல்தேயா முதலிய தேசங்களுடனும், தமிழகம் வணிகஞ் செய்து வந்தது.

சீனக்கண்ணாடி சீனக்காரம் சீனக்கிண்ணம் சீனச்சூடன் சீனப்பட்டு முதலிய பண்டங்கள் சீனத்தினின்றும் இலவங்கப் பட்டை, கிராம்பூ, சாதிக்காய், சாதிப்பத்திரி முதலிய சரக்குகள் நாகநாடுகள் என்னும் கீழிந்தியத் தீவுக் கூட்டத்தினின்றும், தமிழரசரின் நால்வகைப் படைகளுள் ஒன்றான குதிரைப்படைக்கு வேண்டுங் குதிரைகள் அரபியாவினின்றும், சித்திரப்பேழை பாவைவிளக்கு மது முதலிய பொருள்கள் யவன நாடுகளினின்றும் தமிழகத்திற்குக் கலங்களில் வந்திறங்கின.

தேக்கு, தோகை (மயில்), அரிசி, அகில், சந்தனம், இஞ்சி, கொட்டை (பஞ்சுச் சுருள்), வெற்றிலை, அடைக்காய் (பாக்கு) முதலிய பல பொருள்கட்குத் தமிழ்ப் பெயர்களே மேலை மொழி களில் வழங்குவது, பழந்தமிழ் நாட்டு ஏற்றுமதிச் சிறப்பைக் காட்டும்.

கல்தேயா நாட்டைச் சேர்ந்த ஊர் என்னும் இடத்தில் அகழ்ந் தெடுக்கப்பட்ட ஒரு தமிழ்நாட்டுத் தேக்க வுத்தரம், கி.மு.3000 ஆண்டுகட்கு முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. கி.மு. 1000 ஆண்டு கட்கு முற்பட்ட சாலோமோன் என்னும் யூதவரசன் காலத்தில் தமிழகத்தினின்று யூதேயாவிற்கு ஏற்றுமதியான தோகையின் பெயர் யூத மொழியான எபிரேயத்தில் துகி என வழங்கி வந்தது.

கடல்வாணிகத்தைப் பெருக்குதற்பொருட்டு, கி.மு. 55-ல் பாண்டியன் ரோமவரசனுக்கும், கி.பி. 1015-ல் முதலாம் இராசராசனும், கி.பி. 1015-ல் இராசேந்திரனும் கி.பி. 1077- ல் முதற் குலோத்துங்கனும் சீனவரசனுக்கும் தூது விடுத்தனர்.

முத்தமிழ் நாட்டுக் கடற்கரையிலும், ஒரு காலத்திற்கு ஒன்றும் பலவுமாக, வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு துறைமுகங்கள் அமைந்திருந்தன. சோழநாட்டிற்கு மயிலை, மல்லை, புகார், காரைக்கால், நாகை, தொண்டி முதலியனவும்; பாண்டிநாட்டிற்குக் கவாடம், கொற்கை, காயல் முதலியனவும்; சேரநாட்டிற்கு வஞ்சி, முசிறி, தொண்டி, மாந்தை, நறவூர், கொடுங்கோளூர், காந்தளூர், விழிஞம், கோழிக்கோடு' துறைநகர்களாய் இருந்துவந்தன.

முதலியனவும்

1. நீர் நாக னல்கிய கலிங்கம்" என்னும் சிறுபாணாற்றுப்படை யடியால் (96) நாகநாட்டினின்று, ஒருவகை யடையும் இறக்குமதியானதாகத் தெரிகின்றது. நீல நாகன் என்பது நாகருள் ஒரு பிரிவாகும். 'நல்கிய என்னும் பாடம் சரியன்று.

2. கோழிக்கோட்டில் ஏற்றுமதியான துணியே பிற்காலத்தில் அத் துறைமுகப் பெயரின் ஆங்கில வடிவமான கலிக்கட் (Calicut) என்பதிலிருந்து திரிக்கப்பட்ட கலிக்கோ (Calico) என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது.