உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




222

சில அரசியற் கருத்துகள்

பழந்தமிழரசரும் புலவரும் பொதுமக்களும், பின் வருமாறு பல அரசியற் கருத்துகளைக் கொண்டிருந்தனர்:

(1) அரசன் உலகத்திற்கு உயிர்.

(2) தெய்வம், தான், தன் வினைஞர், கள்வர், பகைவர், விலங்கு ஆகிய அறுவழியில் வந்த தீங்குகளை அரசன் நீக்கித் தன் குடிகளைக் காத்தல் வேண்டும்.

(3) அரசன் தொழில்கள், ஓதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டித்தல் என ஐந்து.

(4) அரசவெற்றிக்கு அறநெறியாட்சி காரணம்.

(5) அரசவெற்றிக்கு உழவுத்தொழில் காரணம்.

(6) செங்கோலரசன் நாட்டில் மழைவளம் பொழியும்; மக்கள் ஒழுக்கந் தப்பார். விலங்கு ஊறு செய்யாது; கல்வியும் அறமுந் ழைக்கும். கொடுங்கோல் நாட்டில் இவை நிகழா

(7) கொடுங்கோல் அரசன் ஆளும் நாட்டினும், கடும்புலி வாழுங் காடு நன்று.

(8) கோன்நிலை திரியின் கோள்நிலை திரியும்.

(9) அரசன் இறப்பைக் கோள்நிலை முன்னறிவிக்கும். (10) மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனில் இல்லை.

(11) மக்களை நன்னெறிப்படுத்துவது அரசன் கடமை.

(12) மழை பெய்யாமைக்கும் விளைவுக் குறைவிற்கும்

இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிக்கும், அரசன் காரணம். (13) அல்லற்பட்டழுத குடிகளின் கண்ணீர் அரசனை அழித்துவிடும்.

(14) அறம் பிழைத்த அரசனுக்கு அறமே கூற்றமாகும்.