உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

(15) குடி பழிதூற்றுதல் அரசனுக்கு மிக இழிவு.

பழந்தமிழாட்சி

(16) அரசர் தெய்வங்களை இகழ்ந்தால் அவர் நாட்டிற்கு அழிவு வரும்.

(17) அரசரால் அவமதிக்கப்பட்ட முனிவரும், புலவரும் சபிக்கின் அரசும் நகரும் அழியும்.

(18) தெய்வங்கட்குப் படைக்கினும் பலியிடினும் மழைபெய்து நாடு செழிக்கும்.

(19) அரச வாழ்க்கை துன்பம் நிறைந்தது (செங்குட்டுவன் கருத்து). (20) நாடுகளிற் சிறந்தது தமிழ்நாடு (தமிழரசர் கருத்து).

(21) முத்தமிழ் நாடுகளுட் சிறந்தது பாண்டிநாடு (பூதப்பாண் டியன் கருத்து).

(22) அரசின்மையும் வேற்றரசும் நாட்டுக் குற்றமாகும்.

(23) அரசன் எப்படி, குடிகள் அப்படி.

(24) அரசன் குற்றம் குடிகளையும் குடிகள் குற்றம் அரசனையும் சாரும்.

(25) அரசன் பிற நாடுகளை வெல்வது குணமேயன்றிக் குற்றமன்று. (26) ஒருவன் செய்த அல்லது செய்வித்த கொலைக்கு அவனி டத்து மட்டுமன்றி அவன் குலத்தாரிடத்தும் பழி வாங்க லாம். அஃது ஒரு தெய்வத்தின் கோபத்தைத் தணிப்பதாகக் கருதப்படின்.

(27) கொள்ளைச் சொத்தும் பறிமுதலும் கோயிற்குச் சேர்க்கப் பெறின் தீதில்லை.

(28) போரில் செய்த தீவினைகட்குக் கோயிற் றிருப்பணிகள் கழுவாய்.

(29) சித்தரும், முனிவரும் போன்ற பெரியாரைத் துணைக் கோடல் அரசர்க் கரண்செய்யும்; அவரைப் பிழைத்தல் அவருக்கு அழிவு தரும்.