உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




23

நம்பற் கரிய செய்திகள்

பழந்தமிழாட்சியில் நிகழ்ந்தனவாகக் கூறப்பட்டுள்ள பல செய்திகள், இக்காலத்தால் நம்பற்கரியன. அவற்றுட் சில வருமாறு: (1) கழுமலத்தில் அவிழ்த்துவிட்ட யானை, கரிகாலனைத் தேடிச் சென்று கருவூரிற் கண்டு தானே தன்மீது ஏற்றிக் கொண்டு வந்தது.

(2) ஊர்க்கணக்கன் ஆண்டிறுதியில் காய்ச்சிய, இரும்பேந்திக் கணக்கொப்புவித்தது.

(3) கரிகாலன் முகரியென்னும் முக்கண்ணனின்

மிகைக்

கண்ணைப் படத்திலழிக்க, அந் நொடியே அம் முகரியின் கண் தானே மறைந்தது.

(4) பாம்புக்குடமும்,பழுக்கக் காய்ச்சிய இரும்பும், அறமன்றங் களில் தெய்வச்சான்றாக உண்மையுணர்த்தி வந்தது.

(5) புகாரிலுள்ள சதுக்கப்பூதம், அறைபோகமைச்சரும் பொய்க் கரியாளரும் உள்ளிட்ட அறுவகைக் குற்றவாளி களைப் புடைத்துண்டது.

(6) வார்த்திகனை நெடுஞ்செழியன் அதிகாரிகள் சிறையிலிட்ட வுடன், மதுரைக் காளிகோயில் தானே சாத்திக்கொண்டது. (7) மூன்றாங் குலோத்துங்கள் ஒரு பிராமணனுக்குக் கொலைத் தண்டனை விதிக்க, அத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பின், அப் பிராமணன் ஆவி இரவும் பகலும் அரசனைத் தொடர்ந்து துன்புறுத்தி, இறுதியில் திருவிடைமருதூரில் நீங்கினது.