உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

அரசன் தகுதிகள்

ஓர் அரசனுக்குப் பின் அரியணை யேறற் குரியவன், அவ் வரசனுடைய கோப்பெருந்தேவியின் மூத்த மகனாவன். மூத்தமகன் இறந்துவிடின் இளையமகனும், ஆண்மக்களே இல்லாதபோது மகள் வழிப் பேரன்மாருள் மூப்புடையவனும், பேரன்மாரும் இல்லாதபோது கோப்பெருந் தேவிக்கடுத்த தேவியின் புதல்வருள் மூப்புடையவனும், அவரும் இல்லாத போது பிற நெருங்கிய உறவினருள் தகுதிமிக்கவனும், அரியணை யேறுவர்.

அரசனாதற்குரியவன், இளமையிலேயே பல கலைகளையுங் கற்று, பல்வகைப் படைப்பயிற்சியும் பெற்று, வேட்டையாடுவதிலும் தேர்ச்சியுற்று, அறிவு ஆற்றல் அன்பு அறம் மறம் முதலிய குணங் களை ஒருங்கேயுடையவனாய், பல அருஞ்செயலும் அறச்செயலும் ஆற்றிக் குடிகளின் உள்ளத்தைக் கவர்ந்தவனாய், இருத்தல் வேண்டும்.

-

-

மக்கள் யாக்கை சிறப்பாக அரசர் யாக்கை நிலையற்ற தாதலின், ஆளும் அரசன், தனக்குப் பின்னால் அரசியற் குழப்பமும் இடர்ப்பாடும் நேராதவாறு, தன் காலத்திலேயே மூப்புத் தகுதியுள்ள தன் மகனுக்கு அல்லது பேரனுக்கு, மண்டை கவித்து இளவரசு பட்டங்கட்டி, ஆட்சித் துறையிலும் போர்வினையிலும் பிறவற்றி லும் பயிற்சியளிப்பது வழக்கம்.

சு

அரசன் யாருக்கு இளவரசு பட்டம் கட்டினும், ஆட்சித் திறனும் அரசியற் பொறுப்புச் சுற்றத்தின் உடன்பாடும் குடிகளின் இணக்கமும் இருந்தாலொழிய, ஆட்சியைக் கடைபோகக் கொண்டு செலுத்த முடியாது.

பழவிறல் தாயம் புதுவிறல் தாயம் என்னும் இருவகைத் தாயங்களுள், மூவேந்தர் தாயம் பழவிறல் தாயமாகவும், குறுநில மன்னர் தாயம் இருவகையாகவும் இருந்துவந்தன.