உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசச் சின்னங்கள்

19

பஞ்சவன், கைதவன், கௌரியன், தமிழ்நாடன் என்பவும் ஆகும். பாண்டியனுக்குச் செழியன் என்னும் பெயர், பஃறுளியாற்றுச் செழிப்பால் ஏற்பட்டது போலும்!

இயற்பெயராவது பெற்றோரிட்ட பிள்ளைப் பெயர். முதலாம் ராசராசச் சோழனின் பிள்ளைப் பெயர் 'அருண் மொழித் தேவன்' என்பது.

பட்டப்பெயர் என்பது, அரசன் முடி சூடும்போது புனைந்து காள்ளும் பெயர். பிற்காலச் சோழவேந்தர் ஒருவர் விட்டொருவர் தாங்கிய பரகேசரி, இராச கேசரி என்னும் பெயர்களும், பிற்காலப் பாண்டிய வேந்தர் ஒருவர்விட்டொருவர் தாங்கிய மாறவர்மன், சடாவர்மன் என்னும் பெயர்களும், முதற் குலோத்துங்கன் வேங்கை நாட்டில் எய்திய விஷ்ணுவர்த்தனன் என்னும் பெயரும், பட்டப் பெயராம்.

விருதுப் பெயராவது, அரசன் தன் பகைவரை வென்றபோது அதற் கறிகுறியாகச் சூடிக்கொள்ளும் கொற்றப்பெயர். 'முடிவழங்கு சோழன்' 'சோழ கேரளன்' 'முடித்தலை கொண்ட பெருமான்' 'கோனேரின்மை கொண்டான்' 'உலகுய்யவந்த நாயனார்' முதலியன 3ஆம் குலோத்துங்கச் சோழனின் கொற்றப் பெயராகும்.

சிறப்புப் பெயராவது, நல்ல வகையிலோ தீய வகையிலோ ஏதேனுமொரு சிறப்புப்பற்றி, மக்கள் அரசர்க்கு இட்டு வழங்கும் பெயர். முதற்குலோத்துங்கனுக்கு வழங்கிய 'சுங்கந்தவிர்த்த சோழன்' என்பது இசைச் சிறப்புப் பெயரும், 2ஆம் குலோத்துங்கச் சோழனுக்கு வைணவர் வழங்கிய 'கிருமிகண்ட சோழன்' என்பது வசைச் சிறப்புப் பெயரும் ஆகும்.

உயர்வுப் பெயராவது மக்கள் அரசரைக் கண்ணியமாகக் குறிக்கும் பெயர். இறைவன், அடிகள், தேவர், நாயனார், உடையார், பெருமாள், உலகுடைய பெருமாள் என்பன அரசனுக்கும்; பிராட்டியார், நாய்ச்சியார், ஆழ்வார் என்பன அரசிக்கும்; 'மக்கள் நாயனார்' பிள்ளையார் என்பன இளவரசனுக்கும்; பெரியதேவர் என்பது இறந்துபோன அரசனுக்கும்; வழங்கிய உயர்வுப்

பெயர்களாம்.

வரிசைப் பெயராவது அரசனின் தரத்தைக் குறிக்கும் பெயர். வேள், மன்னன், கோவன் (கோன், கோ), வேந்தன் என்பன வரிசைப் பெயராம்.

திணநிலைப் பெயராவது, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்திணைபற்றிய பெயர். வெற்பன், கானகநாடன்,